உங்க வீட்டுல பெண் குழந்தை இருக்கா? இந்த திட்டம் தான் பெஸ்ட்.. ரூ.64 லட்சம் கிடைக்கும்..!!
பெண் குழந்தைகளை பெற்றோர்கள் தங்களுடைய குழந்தையின் எதிர்காலத்திற்கு இப்போதில் இருந்தே பணத்தை சேமிக்கத் தொடங்கி விடுவார்கள். அப்படி சேமிக்க தொடங்குவதுதான் நல்லது. இவ்வாறு பெண் குழந்தையின் எதிர்காலத்திற்கு பணத்தை சேமிப்பதற்கு பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன.
நாட்டில் பெண்களின் நலனைப் பாதுகாக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண் குழந்தைகளுக்கான சிறந்த திட்டமாக சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) உள்ளது. இத்திட்டம் தமிழ்நாட்டில் செல்வமகள் சேமிப்புத் திட்டம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்கால வாழ்விற்காக சேமிப்பதற்கு வழிவகை செய்து தருகிறது.
இந்த திட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெயரில் அவருடைய பெற்றோர் அல்லது பாதுகாவலரோ கணக்கு தொடங்க முடியும். மேலும், மத்திய அரசின் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் 7% வட்டி வழங்கப்படுகிறது. பெண் குழந்தைக்கு 10 வயது பூர்த்தி அடையும் முன்பாக இத்திட்டத்தில் இணைய வேண்டும். ஒவ்வொரு மாதமும் ரூ.12,500 நீங்கள் செலுத்தி வர வேண்டும். மகளின் 21 வயதில் உங்களுக்கு கிடைக்கும் தொகை ரூ.63,79,634. இதில் நீங்கள் முதலீடு செய்த ரூ.22,50,000 போக எஞ்சியுள்ள ரூ.41,29,634 லாபமாக கிடைக்கும்.
Read more ; தமிழகத்தில் உதயமாகிறது 13 புதிய நகராட்சிகள்..!! – தமிழக அரசு அரசாணை வெளியீடு