"அமுக்குவான் பேய்" பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா…? அவற்றின் பின்னணியில் உள்ள மருத்துவ உண்மை என்ன.?
தூக்கம் என்பது மனிதனுக்கு அத்தியாவசியமான ஒன்று. ஆழ்ந்து தூங்குவதையே விரும்புவோம். சில நேரம் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது நம்மை யாரோ அழுத்துவது போன்ற ஒரு உணர்வு நமக்கு ஏற்படும். இது அனைவருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான ஒரு உணர்வு. பெரும்பாலான அனைவருமே இந்த உணர்வை உணர்ந்து இருப்பார்கள் .
இது தொடர்பாக நாம் வீட்டில் இருக்கும் பெரியோர்களிடம் கேட்டால் அவர்கள் இது அமுக்குவான் பேய் அல்லது பிசாசு மற்றும் பூதத்தின் வேலையாக இருக்கும் என்று கூறுவார்கள். சிலர் கெட்ட கனவு என்று கூறுவதும் உண்டு. ஆனால் இதற்கு அறிவியல் ரீதியான பின்னணி இருக்கிறது. அந்தப் பின்னணி எது என்று இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
அறிவியல் ரீதியாக இது உடலில் நிகழக்கூடிய ஒரு சாதாரண செயல் என்று கூறலாம். மருத்துவத்தில் இதனை ஸ்லீப்பிங் பெராலிசிஸ் இன்று அழைக்கிறார்கள். அதாவது நம் உடல் உறக்கத்தின் அடுத்த நிலைக்குச் செல்ல மறுப்பதே இதற்கு காரணமாக அமைகிறது. இதற்கு நம் உடலில் உணர்வுகளை கடத்தும் நியூரான் செல்களில் ஏற்படும் குழப்பமும் முக்கிய காரணமாக அமைகிறது.
நமது மூளை எழ வேண்டும் என்று உடலுக்கு சிக்னல் செய்கிறது. ஆனால் உடல் தூங்க வேண்டும் என்று நினைக்கிறது. அந்த நேரத்தில் உறங்கும் நிலைக்கும் விழிக்கும் நிலைக்கும் இடையில் ஏற்படும் தடுமாற்றமே இந்த உணர்வுக்கு காரணமாக அமைகிறது. இது போன்ற உணர்வுகளுக்கு அதிக வேலைப்பளு மன அழுத்தம் குறித்த நேரத்தில் உணவு உண்ணாமல் இருப்பது ஆகியவை முக்கிய காரணங்களாக அமைகிறது.