For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இரவு உணவை 9 மணிக்கு மேல் சாப்பிடுறீங்களா..? உங்களுக்கு இந்த பிரச்சனை வருவது உறுதி..!! எச்சரிக்கும் நிபுணர்கள்..!!

08:57 AM May 13, 2024 IST | Chella
இரவு உணவை 9 மணிக்கு மேல் சாப்பிடுறீங்களா    உங்களுக்கு இந்த பிரச்சனை வருவது உறுதி     எச்சரிக்கும் நிபுணர்கள்
Advertisement

இன்று நாம் வேகமாக ஓடும் வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனால், சாப்பிட கூட நேரமில்லை. அந்த அளவுக்கு பிஸியான வாழ்க்கையை வாழ்கிறோம். இதனால், அந்த நேரத்தில் பசியை போக்கிக் கொள்ளக் கிடைத்ததைச் சாப்பிடுகிறோம். ஆனால், இது நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்பதை மறந்து விடுகிறோம். அந்தவகையில், பலர் இரவில் தாமதமாக சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதாவது, இரவு 9 மணி முதல் 12 மணி வரை சாப்பிடுவார்கள். ஏன் இன்னும் சிலரோ 12 மணிக்கு பிறகு கூட சாப்பிடுவார்கள். சிலர் அதிகாலை 3, 4 மணிக்கெல்லாம் சாப்பிடுவார்கள்.

Advertisement

இப்படி சாப்பிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை என்று நினைக்கிறார்கள். ஆனால், இப்படி தினமும் சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக அவர்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்கின்றனர் நிபுணர்கள். நாம் ஆரோக்கியமாக இருக்க உணவு நேரம் என்பது மிகவும் அவசியம். அவற்றை ஒழுங்காக கடைபிடிக்காவிட்டால், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படுவது உறுதி. இரவில் தாமதமாக சாப்பிடுவதால் எடை அதிகரிப்பு, செரிமான பிரச்சனைகள், தூக்கமின்மை, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை பிரச்சனைகள் ஏற்படும்.

நீங்கள் தினமும் இரவு தாமதமாக சாப்பிட்டு வந்தால், எதிர்காலத்தில் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். அதுபோல, இரவில் அளவுக்கு அதிகமாக உணவு எடுத்துக் கொண்டால் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவுகளில் மாற்றம் ஏற்படும். குறிப்பாக, எதிர்காலத்தில் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் நிபுணர்கள். மேலும், இரவு 9 மணிக்கு மேல் சாப்பிட்டால் இரத்தக்கசிவு பக்கவாதம் ஏற்படுமாம். இதன் காரணமாக மூளையில் உள்ள இரத்தக்குழாய் வெடித்து ரத்தம் வரக்கூடும் என பல ஆய்வுகள் கூறுகிறது. குறிப்பாக, இரவு உணவு சாப்பிட்ட உடனே தூங்க வேண்டாம். இதுவும் பக்கவாதத்தை உண்டாக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Read More : உங்களிடம் பான் கார்டு இருக்கா..? இந்த விஷயங்களை மட்டும் மறந்துறாதீங்க..!!

Advertisement