இரவில் கனவு வருதா.. எந்த கனவுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? சாஸ்திரம் கூறுவது இதோ..
தூங்கும் போது கனவுகள் வருவது இயற்கையானது தான். சில கனவுகள் நம்மை ஆச்சரியப்படுத்தினாலும், சில கனவுகள் நம்மை மிகவும் அச்சப்படுத்துகின்றன. இருப்பினும் கனவுகளுக்கு மறைவான அர்த்தங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. கனவு சாஸ்திரப்படி ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் உண்டு என சொல்லப்படுகிறது. அப்படி இந்த பொருட்களையும், விஷயத்தையும் நீங்கள் கனவில் கண்டால் அது அசுபமாக கருதப்படுகிறது. இது போன்ற கனவுகளை நீங்கள் கண்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.
அறிவியலின்படி கனவுகள் என்பது நம் ஆழ்ந்த மனதில் பதிந்த ஒரு விஷயம் தான். இவை எதிர்காலத்தில் நடக்கலாம், நடக்காமலும் போகலாம் என்று வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒரு சில கனவுகளின் பலன்கள் என்ன என்பதை குறித்து ஜோதிட சாஸ்திரம் குறிப்பிட்டுள்ளதை பார்க்கலாம்.
1. மீன்கள் கனவில் வந்தால் வீட்டில் சீக்கிரம் சுப காரியங்கள், திருமணங்கள் நடைபெறும் என்பது அர்த்தமாகும்.
2. யாரோ நம்மை அடிப்பது போல கனவு வந்தால் தேர்வில் தேர்ச்சி பெறுவீர்கள் என்றும், வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் அர்த்தமாகும்.
3. காற்றில் மிதப்பதைப் போல கனவு வந்தால் வெளிநாடுகளுக்கு வேலை விஷயமாகவோ அல்லது சுற்றுலா செல்வீர்கள் என்று அர்த்தம் ஆகும்.
4. இறப்பது போல் கனவில் வந்தால் மிகப்பெரும் பிரச்சனை ஒன்று முடிவுக்கு வரப்போகிறது என்று அர்த்தமாகும்.
5. நிர்வாணமாக இருப்பது போல் கனவில் வந்தால் உங்களுக்கு ஏதோ பிரச்சினை வரப்போகிறது அல்லது எதையோ பார்த்து பயப்படுகிறீர்கள் என்று அர்த்தமாகும்.
6. கனவில் ஓடுவது போல் வந்தால் ஏதோ பிரச்சனை துரத்துகிறது அல்லது துரத்த போகிறது என்பது அர்த்தமாகும்.
7. கீழே விழுவது போல கனவு வந்தால் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் என்று அர்த்தம் ஆகும்.
8. கனவில் கால்களையும், கைகளையும் கழுவுவது போல் வந்தால் இதுவரை உங்களை துரத்தி வந்த பிரச்சனைகள் மற்றும் துக்கங்கள் உங்களை விட்டு நீங்கும் என்று அர்த்தமாகும்.
9. முத்தம் கொடுப்பது போல் கனவு வந்தால் விரைவில் திருமணம் நிகழும்.
10. கனவில் நாய் கடிப்பது போல் வந்தால் எதிர் காலத்தில் பிரச்சனைகள் வர போகிறது என்று அர்த்தமாகும்.
Read more ; வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. நவம்பரில் வெளுக்க போகும் கனமழை..!! தப்பிக்குமா தமிழகம்?