For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Microwave Oven | மைக்ரோவேவ் ஓவனில் சமைக்கிறீங்களா? இந்த எச்சரிக்கை உங்களுக்குத்தான்!

Do you cook in a microwave oven? This alert is for you!
08:49 AM Jul 27, 2024 IST | Mari Thangam
microwave oven   மைக்ரோவேவ் ஓவனில் சமைக்கிறீங்களா  இந்த எச்சரிக்கை உங்களுக்குத்தான்
Advertisement

நவீன வீட்டு உபயோக சாதனங்களைப் பயன்படுத்துகையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டுமென்பதற்கு கீழேயுள்ள சம்பவமே ஓர் உதாரணம்.

Advertisement

மைக்ரோவேவ் ஓவன் இல்லத வீடு தற்ப்போது தேடி பார்த்தால் குறைவு தான். அந்த அளவுக்கு இந்த அவன் அத்தியாவசியம் ஆகிவிட்டது. மைக்ரோ வேவ் அவனில் சமைக்கப்படும் உணவுப் பொருட்கள் கடுமையான மூலக்கூறு சிதைவுக்கு உட்படுகின்றன. அத்தகைய உணவுகளை உண்பது இரத்தத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துவதோடு உடலின் நோயெதிர்ப்பு தன்மையையும் பாதிக்கிறது.

மைக்ரோ வேவ் அவனில் சமைக்கப்படும் உணவில் ஏற்ப்படும் பாதிப்புக்கள்: மைக்ரோ வேவ் அவனில் சூடாக்கப்படும் பால் பாதிப்படைகிறது .குறிப்பாக அதில் உள்ள lysozyme என்ற பொருள். இது பாக்டீரியா தொற்றிலிருந்து பாதுகாப்பது. மைக்ரோவேவால் அழிக்கப்படும் மற்றொரு ஊட்டசத்து விட்டமின் B-12 என 1998 ல் ஜப்பனிய அறிவியல் ஆராய்ச்சி செய்திகளில் வெளியான தகவல். குழந்தைகளுக்கான் உணவுகள் மைக்ரோவேவுக்கு உட்படுவதால் அதிலுள்ள சில trans-amino acid கள் trans-fatty acid போன்ற செயற்கைப் பொருளாக மாறுகின்றன. அதிலும் L-proline என்ற ஒரு அமினோ அமிலம் நரம்பு மண்டலத்தையும் சிறுநீரகத்தையும் பாதிக்கும் ஒரு வகை விஷப்பொருளாக மாறுகிறது.”1989 ல் வெளியான Lancet மருத்துவ சஞ்சிகையில் Dr. Lita Lee இவ்வாறு எழுதியிருக்கிறார்.

ஒரு சின்ன சோதனை செய்து பாருங்கள். இரண்டு பானைகளில் தாவர விதைகளைப்போட்டு ஒன்றில் சாதா தண்ணீரையும், மற்றொன்றில் மைக்ரோ வேவில் சூடாக்கியத் தண்ணீரையும் விட்டு விதைகள் முளைக்கிறதா என பாருங்கள். மைக்ரோ வேவ் தண்ணீரில் விதைகள் முளைக்காதாம். செடியானாலும் வாடிப் போய்விடும். சாதாரண அடுப்பில் எரிபொருள் எரியும் போது அது காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடன் வினை புரிந்து இன்னொரு மூலக்கூறாக மாறும்போது வெப்பம் வெளிவிடப்படுகிறது. இந்த வெப்பம வெப்ப அலைகளாக்ப் பரவி உணவை அடைந்து சூடாக்குகிறது.

சாதாரணமாக அடுப்பில் உணவு சூடாக்கப்படுவதற்கும் மைக்ரோ வேவ் உணவை சூடாக்கும் முறைக்கும் முக்கிய வேறுபாடு உள்ளது. மைக்ரோ அலைகள் பாத்திரத்தை சூடாக்காமல் நேரடியாயாக உணவில் உள்ள மூலக்கூறுகளை அதிரச்செய்து சூடாக்குகின்றன்.குறிப்பாக நீர் மூலக்கூறுகளை.இந்த அதிரடியில் மூலக்கூறுகளிடையே எலெக்ட்ரான் கொடுக்கல் வாங்கல் ஏற்பட்டு மூலக்கூறுகள் மாற்றமடையலாம் புதிய மூலக்கூறு இணைப்புகள உண்டாகலாம் என்று நம்பத்தான் தோன்றுகிறது. மைக்ரோ அவனில் மின்சார அலை உண்டாக்கும் அதிர்வுகளால் (சுமார் 2.5 gigahertz) நீர் ,கொழுப்பு, சர்கரை மூலக்கூறுகள் அதிர்வடைந்து உராய்வடைந்து வெப்பம் உண்டாகிறது. பிளாஸ்டிக் , கண்ணாடி,பீங்கான் பாத்திரங்களில் இந்த அலை பாதிக்காது. சமையலுக்கு இத்தகைய பாத்திரங்களையே உப்யோகிக்க வேண்டும்.

உலோகப் பாத்திரங்கள் ,அலுமினியம் ஃபாயில்கள் மைக்ரோ வேவ் அவனில் உபயோகப் படுத்தக்க்கூடாது. உலோகங்களில் மைக்ரோ வேவ் மின்சாரததை தூண்டுகிறது. இது மெல்லிய உலோகங்களில் ஸ்பார்க் (spark) ஐ உருவாக்கி எரியச் செய்கிறது.மைக்ரோ வேவ் அவனில் முட்டைகளை உடைக்காமல் அப்படியே வைத்து சமைக்கக் கூடாது. முட்டை வெடித்து விடும். சுத்தமான தண்ணீரை மைக்ரோ வேவ் அவனில் வைத்து அதிகமாக சூடாக்குவதில் ஆபத்து உள்ளது. ஏனெனில் பாத்திரம் சூடாகமல் தண்ணீர் மட்டும் சூடாவதால் தண்ணீர் அதன் கொதி நிலைக்கு மேல் அதிக வெப்பமடைகிறது. வெப்பம் 100°c க்கு மேல் போனால் கூட நீர் குமிழ்களோ நீராவியோ வெளியாகாது.

இந்த நிலையில் அந்த தண்ணீர் கோப்பையை அவனிலிருந்து வெளியே எடுக்க முயன்றால் உண்டாகும் சிறு அதிர்வால் தண்ணீர் வெடித்தது போன்று கொதிநிலைக்கு மேல் வெப்பமடைந்த தண்ணீர் கொப்பளித்து சிதறும். இதை தவிர்க்க தண்ணீர் சூடாக்கும் போது ஒரு உலோகமற்ற கரன்டியை அதில் இட்டு வைக்கலாம். பீதி வேண்டாம் அபூர்வமான நிகழ்வு இது என்றாலும் இப்படி நடைபெறும் வாய்ப்பு உள்ளது உண்மை. மைக்ரோவேவில் பட்டர் தடவிய பாப் கார்ன் தயாரிக்கும் போது வெளியாகும் புகையில் Diacetyl என்ற வேதிப்பொருள் நுரைஈரலை மோசமாகப் பாதிக்கிறது. பால் பொருட்கள் , வைன் ஆகியவற்றிலும் இது உருவாகிறது.

Read more ; கடந்த ஆண்டை விட டிஜிட்டல் பேமெண்ட்கள் 12.6% உயர்ந்துள்ளது..!! – RBI அறிவிப்பு 

Tags :
Advertisement