தினமும் தலைக்கு குளிக்கிறீர்களா?. இந்த அபாயங்கள் ஏற்படும்!. மருத்துவர்கள் எச்சரிக்கை!
Hair wash: ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான கூந்தல் வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புகின்றனர். முடியை நன்கு பராமரிக்க, அவற்றை சுத்தமாக வைத்திருப்பது முதல் விஷயம் ஆகும். சிலர் ஒவ்வொரு நாளும் தங்கள் தலைமுடியை ஷாம்பு போட்டு குளிக்கிறார்கள். மறுபக்கம் சிலரோ அடிக்கடி தலை குளிப்பதை தவிர்க்கிறார்கள். தலைக்கு குளிப்பது முக்கியம் என்றாலும், அது ஒவ்வொரு நாளுக்கும் தேவையா? அல்லது மக்கள் தங்கள் தலைமுடியை எவ்வளவு நாளுக்கு ஒரு முறை குளிக்க வேண்டும் என பார்க்கலாம்.
உடல் அமைப்பு மற்றும் அம்சங்களின் அடிப்படையில் ஒவ்வொரு நபரும் மற்றவரிடமிருந்து வேறுபடுவதால், தலைக்கு குளிப்பதும் அவர்களின் தேவையும் வேறுபட்டது. உடலில் வழியும் வியர்வையையும் அதன் மூலம் வெளியேறும் பாக்டீரியாக்களையும் தடுப்பதற்கு குளிப்பது போல, தலையிலிருந்து பரவும் நோய் கிருமிகள் மற்றும் வியர்வையை தடுக்கவும் பலர் தலைக்கு குளிப்பர். ஆனால், இதை தினமும் செய்யக்கூடாது என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.
தினமும் தலைக்கு குளிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்: நம் முடியின் தன்மை மற்றும் உச்சந்தலையின் தன்மையை பொறுத்து நாம் தினமும் தலைக்கு குளிக்கலாமா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும். ஒரு சிலருக்கு தினமும் தலைக்கு குளிப்பதால் முடி இழப்பு அபாயம் அதிகரிக்கலாம். கேசம் உறுதியிழந்து, வறண்டு காணப்படலாம். ஒரு சிலருக்கு தலை அரிப்பு ஏற்பட்டு, பல சமயங்களில் முடி எண்ணெய் பசையுடன் இருப்பது போலவும், முடி வலுவே இல்லாமல் இருப்பது போலவும் காட்சிப்படுத்தும்.
ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சனையை கொண்டவர்கள் தலைக்கு குளிக்கும் நாட்களில் தும்மல், இருமல் மற்றும் தலைவலியால் மிகவும் அவதிப்படுவர். ஒரு சிலருக்கு சீதளம், தலையில் நீர்க்கோர்த்துக்கொள்வது போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். இதனால், இது போன்ற பாதிப்புகள் இருப்பவர்கள் தினமும் தலைக்கு குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீப காலமாக பலர் சந்திக்கும் பிரச்சனையாக பார்க்கப்படுவது முடி இழப்பு. இதை தவிர்க்க சில முடி பராமறிப்பு பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. நமது முடி மற்றும் உச்சந்தலைக்கு ஏற்ற ஷாம்பூக்களை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமாகும். வறண்ட முடி கொண்டவர்கள் தினமும் தலைக்கு குளிப்பதை தவிர்க்கலாம். அவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளித்தால் பயன் பெறுவர் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அடிக்கடி தலை முடியை அவிழ்த்து விடுவது நல்ல ஹேர் ஸ்டைல்தான் என்றாலும், இதனால் முடி வெடிப்புகள் அதிகமாக ஏற்பட்டு, முடி இழக்க நேரலாம். எனவே, வீட்டில் இருக்கும் போது அல்லது முடிந்த அளவு முடியை பின்னல் போட்டுக்கொள்வது நல்லதாகும். தலைக்கு எண்ணெய் வைப்பது நல்லதுதான். ஆனால் அதிக எண்ணெய் அல்லது தவறான எண்ணெய் தலையில் பொடுகு உற்பத்தியை அதிகரிக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே, தலைக்கு குளிப்பதற்கு 20 முதல் 30 நிமிடங்களுக்கு முன்னர் எண்ணெய் வைத்துவிட்டு பின்னர் ஷாம்பூ போட்டு குளித்து விடலாம்.
டிக்கு ஊட்டச்சத்து தரும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியம் ஆகும். சால்மன் மீன்கள், வால்நட்ஸ், ப்ராக்கலி, காலிஃப்ளவர், ஃப்ளேக்ஸ் விதைகள் உள்ளிட்டவை முடி வளர உதவும் உணவுகளாகும். மன அழுத்தம், தேவையற்ற குழப்பம், பதற்றம் உள்ளிட்டவையும் முடி அதிகமாக கொட்டுவதற்கு காரணமாக அமையும். எனவே, யோகாசனம், மன நல ஆலோசகரிடம் செல்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு மன நலனை ம்படுத்திக்கொண்டால் முடி இழப்பு அபாயத்தையும் தவிர்க்கலாம் என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.