முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உங்களுக்கும் மத்திய அரசின் ரூ.2,000 நிதியுதவி வேண்டுமா..? அப்படினா உடனே இதை பண்ணுங்க..!!

05:36 PM Nov 30, 2023 IST | 1newsnationuser6
Advertisement

பிரதமர் கிசான் யோஜனா என்பது நாட்டில் உள்ள விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டமாகும். இத்திட்டம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு இந்த நிதியுதவி ஒவ்வொரு ஆண்டும் 3 தவணைகளாக வழங்கப்படுகிறது. ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர், டிசம்பர்-மார்ச் மாதங்களில் இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.

Advertisement

சமீபத்தில் பிரதமர் கிசான் 15-வது தவணை நிதி வெளியிடப்பட்டது. மொத்தம் 8 கோடி பயனாளிகளின் கணக்குகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வெளியிட்ட 15-வது தவணை நிதி இன்னும் சில விவசாயிகளின் கணக்கில் டெபாசிட் செய்யப்படவில்லை. பயனாளிகள் பட்டியலில் பெயர் இருந்தும் இத்திட்டத்தின் கீழ் பணம் கிடைக்காத விவசாயிகள் பலர் உள்ளனர். இதனால் அவர்கள் அனைவரும் கவலையடைந்துள்ளனர்.

ஆனால், தகுதியான விவசாயிகளுக்குக் கூட நிதி வழங்கப்படாததற்கு முக்கியக் காரணம் e-KYC-ஐ முடிக்காததுதான். உங்கள் இ-கேஒய்சியை ஆன்லைனில் முடிக்க வேண்டும் என்று அரசு எப்போதும் சொல்லிக் கொண்டே இருக்கிறது. ஆனால், சிலரால் அதைச் செய்ய முடியவில்லை. இ-கேஒய்சியை முடிக்க ஒருவர் PM Kisan Portal அல்லது சேவை மையங்களுக்குச் செல்லலாம். e-KYC-ஐ முடிக்க மொபைலையும் பயன்படுத்தலாம் என்பது பலருக்குத் தெரியாது. உங்கள் ஸ்மார்ட்போனில் pmkisan.gov.in-க்கு சென்று, அங்கேயும் e-KYC செயல்முறையை முடிக்கலாம்.

இதற்கு முதலில் eKyc விருப்பத்தை கிளிக் செய்து தொடரவும். அதன் பிறகு ஆதார் அட்டை எண், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு தேடவும். பின்னர் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை என்டர் செய்து ஓடிபி-யை பெறவும். உடனடியாக உங்கள் மொபைலில் பெறப்பட்ட ஓடிபியை உள்ளிட்டு தகுந்த தகவலை வழங்கவும். அப்போதுதான் உங்கள் இ-கேஒய்சி முடிவடையும். இதற்கிடையே, இப்போது அனைத்து விவசாயிகளும் பிரதமர் கிசான் 16-வது தவணை பணத்திற்காக காத்திருக்கின்றனர். இந்த உத்தரவில், இம்முறை 16வது தவணை பணம் பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் விடுவிக்கப்படும் என்று தெரிகிறது.

இவை அனைத்தையும் முடித்த பிறகும், பிஎம் கிசான் பணம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்றால், உடனடியாக உதவி எண்ணில் புகார் அளியுங்கள். PM Kisan Yojana ஹெல்ப்லைன் எண் 155261 அல்லது 1800115526 (கட்டணமில்லா சேவை) அல்லது 011-23381092 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Tags :
பிஎம் கிசான் திட்டம்பிரதமர் மோடிவிவசாயிகள்
Advertisement
Next Article