காலையில் எழுந்ததும் முதல் வேலையா உங்கள் குழந்தைகளிடம் இப்படி பண்ணுங்க..!! பெற்றோர்களே மறந்துறாதீங்க..!!
நவீன உலகத்தில் போராட்டம் என்பதே வாழ்க்கையாகிவிட்டது. இதுமட்டுமல்லாமல் ஒருவர் மீது ஒருவருக்கொருவர் போட்டி என்பது அதிகரித்து விட்டது. டார்வின் சொன்னது போல தக்கனபிழைத்து வாழ்தல் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. தங்களை இந்த உலகத்தில் தக்க வைத்துக்கொள்ள பெரியவர்கள் மட்டுமல்ல, குழந்தைகளும் போராட வேண்டி உள்ளது. இந்த போராட்டத்தில் குழந்தைகளின் வாழ்க்கை முறையும் மன அழுத்தம் நிறைந்ததாக மாறிவிட்டது. படிப்பில் இருந்து விளையாட்டு, கலை என எல்லாவற்றிற்கும் போட்டி அதிகரித்துள்ளதால் ஒவ்வொரு அடியிலும் போராட்டத்தை கடக்க வேண்டியுள்ளது. இதனால் குழந்தைகள் இரவும் பகலும் மன அழுத்தத்தில் வாழத் தொடங்குகின்றனர்.
அவர்கள் மன அழுத்தத்திலிருந்து பாதுகாக்கப்படாவிட்டால், அது அவர்களை மனச்சோர்வை நோக்கித் தள்ளும். அத்தகைய சூழ்நிலையில், பெற்றோர்கள் அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சில நேர்மறையான வார்த்தைகளைப் பேசினால், அது நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். குழந்தை பருவத்தை அவர்கள் குழந்தைகளாக அனுபவிக்க தூண்டும் வார்த்தைகளாக அவை இருக்க வேண்டியது அவசியம். அதுவும் காலையில் அவர்களிடம் நீங்கள் சொல்லும் சில அன்பான வார்த்தைகள் அவர்கள் நாளை மகிழ்ச்சியானதாகவும் குதூகலம் நிறைந்ததாகவும் மாற்றும். அந்த சந்தோசத்துடன் நாள் முழுவதும் இருப்பர்.
நீங்கள் காலையில் எழுந்ததும் உங்கள் குழந்தையை அரவணைத்து, அவர்தான் உங்களின் எல்லாமே என்றும், நீங்கள் அவரை மிகவும் நேசிக்கிறீர்கள் என்றும் அவருக்கு உணர்த்தினால், அது அவரை உள்ளிருந்து வலுப்படுத்த உதவும் . உங்கள் பிள்ளைகள் அவர்கள் போக்கில் தனித்துவமானவர்கள், அவர்களைப் பற்றி நீங்கள் பெருமைப்படுகிறீர்கள் என்று அவர்களிடம் சொன்னால் அது அவர்களுக்கு பெரிய மனா பலத்தை அளிக்கும். ஒவ்வொரு குழந்தையும் தனது பெற்றோர்கள் தன்னை நல்ல மனிதராகக் கருத வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே, இந்த விஷயம் உங்களுக்குத் தெரியும் என்று நீங்கள் அவரை உணர வைத்து, இந்த விஷயத்தை எல்லோருக்கும் முன்பாக அவர்களைப் பாராட்டி பேசினால் அது அவரது பெருமை என்பதை குழந்தைகள் உணர்வர். பின்னர் அவரது வாழ்நாள் முழுவதும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று மெனக்கெடுவர்.
பெற்றோர் எப்போதும் தன்னை திட்டுகிறார்கள், குறைகளை சுட்டிக்காட்டி பேசுகிறார்கள் என்று தான் குழந்தைகள் நினைத்துக்கொண்டு இருப்பார். அது அவர்களது குழந்தை பருவத்தின் என்ன ஓட்டம் . கண்டித்து வளர்ப்பது பெற்றோரது கடமையும் தான். ஆனால் அவர் செய்யும் நல்ல விஷயங்களை பாராட்டி அவ்வபோது தட்டிக்கொடுத்தால் அவர்களுக்கு ஏற்படும் குதூகலம் அவர்களை இன்னும் சரியான பாதையில் ஓட வைக்கும். குழந்தை - பெற்றோர் இடையே நல்ல உறவு இல்லை என்றாலும், சில சமயங்களில் நீங்கள் அவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க முயன்றால் உறவின் நிலை நிச்சயம் மாற்றம் பெரும். அவர்களை எப்போது மகிழ்ச்சியாக பார்க்க விரும்புகிறீர்கள் என்று சொன்னால் நீங்கள் சொல்லும் விஷயங்கள் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும்.
இருவருக்கும் இடையிலான உறவு புத்துயிர் பெறுவதோடு குழந்தைகளை மன அழுத்தத்தில் இருந்து விலக்கி வைக்கும். உங்கள் குழந்தை ஏதாவது நல்லது செய்தால், அதை நிச்சயமாக பாராட்ட வேண்டும். ஸ்கூலுக்குப் போறதுக்கு முன்னாடி அவங்ககிட்ட பேசி, அவர் எவ்வளவு நல்ல வேலையைச் செய்துள்ளார் என்று கேலியாகக் கேட்டுவிடுங்கள்! இதைச் செய்வதன் மூலம் குழந்தை உள்ளுக்குள் மகிழ்ச்சி அடையும். நாள் முழுவதும் குழந்தையை ஊக்குவிக்கும்.