உங்கள் வீட்டில் கரையான் தொல்லை அதிகம் இருக்கா? அப்போ இந்த ஒரு பொருள் போதும்..
பொதுவாகவே பலரின் வீடுகளில் இருக்கும் பெரிய பிரச்சனை கரையான். உருவத்தில் சிறிதாக இருக்கும் இந்த கரையான், வீட்டின் சுவர், மரப் பொருட்கள், புத்தகங்கள் என பல முக்கியமான பொருள்களை அரித்துவிடும். ஒரு சிலர் வீட்டில், இந்த கரையான் தொல்லை மிகவும் அதிகமாகவே இருக்கும். கரையான்கள் எபோதும் வீட்டில் இருக்கும், ஆனால் குறிப்பாக மழைக்காலத்தில் இதன் தொல்லை சற்று அதிகமாகவே இருக்கும். ஏனென்றால், மழை காலத்தில் நமது வீடு ஈரப்பதமாக இருப்பதால், கரப்பான்கள் இனப்பெருக்கம் செய்யும். இந்நிலையில், கரப்பான் இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதனை சரி செய்வது மிக முக்கியம்.
ஒரு சிலர் இந்த கரையான்களை விரட்ட கெமிக்கல் நிறைந்த மருந்துகளை பயன்படுத்துவது உண்டு. ஆனால் அந்த மருந்துகள் மூச்சு திணறல் உள்ளிட்ட பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். அந்த வகையில், உங்கள் வீட்டில் கரையான் அதிகமாக இருந்தால் எந்த கெமிக்கலும் இல்லாமல் இயற்கையாக, நிரந்தரமாக எப்படி விரட்டலாம் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இது போன்ற கரையான்களை கொள்வதற்கு, எலுமிச்சை மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இதற்க்கு முதலில், ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் வினிகர் சேர்ந்து நன்றாக கலந்து விடுங்கள்.
பின்னர் அதில், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள். இப்போது கரையான் அரித்துள்ள இடங்களில் ஸ்பிரே செய்யுங்கள். இப்படி நாம் தொடர்ந்து செய்வதால் கரையான் முற்றிலும் அழிந்து விடும். அது மட்டும் இல்லாமல், மீண்டும் வராமல் இருக்கும். நீங்கள் கிராம்பை பயன்படுத்தியும் கரையான்களை விரட்டலாம். இதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் கிராம்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு அந்த தண்ணீரை நன்கு ஆற வைத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, கரையான் உள்ள இடங்களில் ஸ்பிரே செய்யுங்கள். இதனால் கரையான்கள் ஒரேடியாக அழிந்துவிடும்.