ஒரு மாசம் வர்ற கேஸ் 2 மாசம் வரணுமா?? அப்போ இதை மட்டும் செய்யுங்க...
தற்போது உள்ள காலகட்டத்தில், கேஸ் அடுப்பு இல்லாத வீடே கிடையாது. அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறியுள்ளது, கேஸ் அடுப்பு. கேஸ் அடுப்பை சரியாக பயன்படுத்தினால், அதிக நாட்கள் வரும். ஆனால் ஒரு சிலர் செய்யும் தவறால், கேஸ் சீக்கிரம் முடிந்து விடும். அந்தவகையில், கேஸ் அடுப்புக்கு மிகவும் முக்கியம் என்றால், அது பர்னர் தான். பொதுவாகவே, உணவு சமைக்கும் போது கேஸ் பர்னர் மீது உணவு வெளியில் சிந்தி, அதன் ஓட்டை அடைத்து விடும். இதனால், தீ கம்மியாக எரியும். இதனால் உணவு சமைக்க அதிக நேரம் செலவாகி, அதிக கேஸ் செலவாகும். இதனால் தான் பலருக்கு கேஸ் சீக்கிரம் காலியாகி விடுகிறது. இதனால் பர்னரை நாம் சுத்தமாக வைக்க வேண்டும். ஆனால் பர்னரை சுத்தம் செய்வது சுலபமான காரியம் இல்லை. இதனால் தான் பலர் பர்னரை சுத்தம் செய்யாமல் விட்டு விடுகின்றனர்.
ஆனால், கேஸ் அடுப்பின் பர்னரை வீட்டிலேயே சுலபமாக சுத்தம் செய்யலாம். ஆம், விடாப்பிடியான கரையை பர்னரில் இருந்து எப்படி நீக்குவது என்பதை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.. இதற்கு முதலில், ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 2 டீஸ்பூன் பேக்கிங் சோடா, பாதி தண்ணீர் மற்றும் வினிகரை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இப்போது கேஸ் அடுப்பை சுத்தம் செய்ய உதவும் லிக்விட் தயார். இப்போது இதை வைத்து எப்படி அடுப்பை சுத்தம் செய்வது என்பதை பற்றி பார்ப்போம். இதற்கு முதலில், நாம் தயாரித்த லிக்விடை அடுப்பின் மீது ஸ்ப்ரே செய்யுங்கள். இதை 10-15 நிமிடங்களுக்கு அப்படியே ஊற வைக்க வேண்டும். பின்னர் கடற்பாசி மூலம் கேஸ் அடுப்பை லேசாக தேய்த்தால் போதும், எல்லா கரைகளும் வெளியே வந்து விடும். இறுதியாக, ஈரமான சுத்தமான துணியால் அடுப்பை துடைத்தால் பிசுபிசுபாக இருக்கும் உங்கள் கேஸ் அடுப்பு பளபளப்பாக மாறிவிடும்.
கேஸ் பர்னரை சுத்தம் செய்ய, ஒரு பாத்திரத்தில் பாதி தண்ணீர் மற்றும் வினிகரை நன்கு கலக்க வேண்டும். இப்போது பர்னரை அதில் சுமார் 30 நிமிடங்களுக்கு ஊறவைக்க வேண்டும். பின்னர் பர்னரை அதிலுருந்து எடுத்து சாதாரண தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். மேலும், பேக்கிங் சோடாவில் தண்ணீரை கலந்து பேஸ்ட் போல் செய்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்டை பர்னரில் தடவி 15-30 நிமிடங்கள் ஊற வைத்து விடுங்கள். பின்னர், டூத் பிரஷ் பயன்படுத்தி பர்னரை லேசாக தேய்த்தால் அழுக்குகள் நீங்கி விடும். பிறகு அதை ஒரு துணியால் நன்கு துடைத்து பயன்படுத்தினால் கேஸ் வேகமாக எரிந்து சமையல் சீக்கிரம் முடிந்து விடும்.
Read more: முட்டை நல்லது தான்.. ஆனா இப்படி சமைத்து சாப்பிட்டால் இதய நோய்கள் ஏற்படும்