பித்தப்பை கற்கள் உடனடியாக கரைய இதை பண்ணுங்க போதும்.!?
பொதுவாக நம் உண்ணும் உணவை எளிதாக ஜீரணமாக வைப்பதற்கு பித்தப்பையில் ஒரு வகையான அமிலம் சுரக்கும். நாம் உண்ணும் உணவு எளிதாக ஜீரணமாகாமல் இருந்தால் அந்த அமிலத்தின் அடர்த்தி அதிகமாகும். அப்படி அதிகமாகும் போது பித்தப்பையில் அமில அடர்த்தியின் காரணமாக கற்கள் உருவாகும். இதுவே பித்தப்பை கற்களாக கூறப்பட்டு வருகிறது.
பித்தப்பை கற்கள் வராமல் இருப்பதற்கு அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும். மேலும் செரிமான பிரச்சனை மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் அசைவ உணவை அடிக்கடி எடுத்துக் கொள்ளக் கூடாது. பித்தப்பை கற்கள் பிரச்சனையை வீட்டிலேயே எப்படி சரி செய்யலாம்?
பித்தப்பை கற்கள் எளிதில் கரைய உண்ணாவிரதம் இருந்தாலே போதும் என்று ஆயுர்வேத மருத்துவர் கூறுகிறார். ஆம் இரண்டு வேளை உணவை மட்டும் சாப்பிட்டுவிட்டு, ஒருவேளை உணவிற்கு பதிலாக பழங்களை ஜூஸாக எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக எலுமிச்சை பழச்சாறு, ஆப்பிள் சாறு, பேரிச்சைபழ சாறு, புதினா சாறு, கற்றாழை சாறு, நெறுஞ்சி முள் விதைகளை வேகவைத்து தேன் கலந்து உண்பது, போன்றவற்றை செய்து வரலாம். திரிபலா சூரணம் தினமும் எடுத்து கொள்வதன் மூலமும் பித்தப்பை கல் வேகமாக கரையும்.
ஆயுர்வேத முறைப்படி பல மருத்துவங்கள் கூறப்பட்டு வந்தாலும் மேலே குறிப்பிட்ட உணவு பழக்கங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் பித்தப்பை கற்களை எளிதாக கரைக்கலாம். மேலும் வறுத்த உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், இனிப்புகள், பிரெட், கேக் போன்ற உணவுகளை உண்பதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். மேலும் பித்தப்பை கற்கள் அளவில் பெரியதாக இருந்தால் உணவு முறைகளில் கரைக்க முடியாது. கட்டாயமாக மருத்துவரை சந்தித்து அறிவுரை பெற வேண்டும் என்றும் சித்த மருத்துவர் சரவணகுமார் அறிவுறுத்தி வருகிறார்.