For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குக்கரில் சமைக்கும் போது, தண்ணீர் வெளியே வராமல் இருக்க இதை செய்யுங்கள்..

05:33 AM Sep 30, 2023 IST | 1newsnationuser1
குக்கரில் சமைக்கும் போது  தண்ணீர் வெளியே வராமல் இருக்க இதை செய்யுங்கள்
Advertisement

தற்போது உள்ள அவசர காலகட்டத்தில், நாம் பெரும்பாலும் சமைப்பதற்கு குக்கரை தான் பயன்படுத்துகிறோம். சமையலை சுலபமாக செய்து முடிக்க குக்கர் மிகவும் உதவியாக இருக்கும். என்னதான் சமையலுக்கு குக்கர் உதவியாக இருந்தாலும், அதிலும் ஒரு பிரச்சனை உள்ளது. ஆம், குக்கரில் இருந்து தண்ணீர் வெளியே கசிவது.. ஆம், குக்கர் பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு பெரிய பிரச்சனை. இப்படி குக்கரில் இருந்து தண்ணீர் கசிவதற்கு முக்கிய காரணம் சுத்தம் இல்லாமல் வைத்திருப்பது தான். ஆம், குக்கரை சுத்தம் செய்வதற்கு என்று சில வழிமுறைகள் உள்ளது அது என்ன என்பது பற்று பார்ப்போம்.

Advertisement

குக்கர் பயன்படுத்தி சில மாதங்களில் குக்கர் மூடியின் ரப்பர் தளர்வாகிவிடும். இதனால் குக்கரில் இருந்து தண்ணீர் வெளியேற வாய்ப்பு உள்ளது. அப்படி குக்கரின் ரப்பர் தளர்வாக இருந்தால், உடனே அதை மாற்றிவிடுங்கள். உங்கள் குக்கரின் ரப்பர் சீக்கிரம் தளர்வாகாமல் இருக்க, சமைத்த பிறகு ரப்பரை போட்டு விடுங்கள். அப்படி செய்வதால் ரப்பர் நீண்ட காலம் நீடிக்கும்.

நாம் சமைக்கும் போது, பல நேரங்களில் குக்கரில் உள்ள விசிலில் உணவு சிக்கிக் கொள்ளும். இதனால் நீராவி சரியாக வெளியே செல்ல முடியாமல் தண்ணீர் அதிகளவு கசிய வாய்ப்பு உள்ளது. அதனால் குக்கரின் விசிலை முழுவதும் திறந்து பார்த்து அடைப்புகளை வெளியேற்றி சுத்தம் செய்து விட வேண்டும்.

குக்கரில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டு சமையுங்கள். மேலும், குக்கரின் மூடியைச் சுற்றி எண்ணெய் தடவுவதால், குக்கரில் இருந்து தண்ணீர் வெளியேறாது. மேலும், குளிர்ந்த நீர் ஊற்றி சமைப்பதன் மூலம் குக்கரில் இருந்து தண்ணீர் வருவதைத் தடுக்கலாம். முக்கியமாக, குக்கரில் அதிக தண்ணீர் ஊற்றுவது, அதிக தீயில் வைப்பதை தவிர்க்க வேண்டும். இப்படி செய்வதால், குக்கரில் உள்ள தண்ணீர் வெளியே வராது.

Tags :
Advertisement