மருத்துவர் பரிந்துரையின்றி இந்த மருந்து, மாத்திரைகளை தொடவே தொடாதீங்க..!! உயிருக்கே ஆபத்தாகிவிடும்..!!
ஆரோக்கியமான நபர்கள் பலர், தங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வாழ்நாளை நீட்டிக்கவும் மருத்துவர்கள் பரிந்துரையின்றி, வைட்டமின் மாத்திரை சாப்பிடும் பழக்கத்தில் உள்ளனர். கொரோனா அச்சம் காரணமாக, வைட்டமின் மாத்திரைகளை எடுக்க தொடங்கியவர்கள் அதனை தங்களது தினசரி உணவுடன் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஒரு சிலர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட பிறகும், தொடர்ந்து நோய் எதிர்ப்புச் சக்தியை நீட்டிக்க வைட்டமின் மாத்திரை சாப்பிடுவதைப் பழக்கமாக கொண்டுள்ளனர்.
அதேபோல் காய்ச்சல், தலைவலி, உடல் வலி என எதுவாக இருந்தாலும் சுயமாக மருந்து எடுத்துக் கொள்ளும் பழக்கமும் பலரிடம் உள்ளாது. ஆனால், வலி நிவாரணி மாத்திரைகளால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பது உங்களுக்கு தெரியுமா..? மிதமான அல்லது கடுமையான வலிக்கு பயன்படுத்தப்படும் ஓபியாய்டு (Opioid) மாத்திரைகள் மூளை, முதுகெலும்பு, இரைப்பை, குடல் போன்ற உறுப்புகளில் உள்ள நரம்பு செல்கள் மீது ஓபிபாய்டு ஏற்பிகளுடன் பிணைப்பதன் மூலம் அவை வலி சமிக்ஞ்சைகளை தடுக்கின்றன.
ஓபியம் பாப்பி என்ற தாவரத்தில் இருந்து இந்த மாத்திரை தயாரிக்கப்படுவதால் இவை உடலுக்கு போதை மயக்கத்தை கொடுக்கின்றன. இந்த மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் போதை மயக்கத்திற்கு அடிமையாகலாம். தூக்கம், மலச்சிக்கல், சுவாசம் மற்றும் மன அழுத்தம் போன்ற பக்க விளைவுகளை கூட ஏற்படுத்தும். வீக்கம் மற்றும் வலியை குறைப்பதில் ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த மருந்துகளை அதிகம் பயன்படுத்தினால் அல்சர், கிட்னி பாதிப்பு, இரைப்பை, குடல் பிரச்சனைகள் வரலாம். சில சமயங்களில் இது மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.
எனவே Ibuprofen, Naproxen, Diclofanac, Celecoxib, Mefenamic Acid, Etoricoxim, Indomethacin, Aspirin ஆகிய மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரையின்றி எடுத்துக் கொள்ளவே கூடாது. காய்ச்சல், தலைவலி என எதுவாக இருந்தாலும் மருத்துவர்களின் பரிந்துரையின்றி, சுயமாக மருந்து எடுத்துக் கொள்வது தவறு. இதனால் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்படலாம். அப்படி உடல்நலப் பிரச்சனை ஏற்பட்டால், உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது.
Read More : கர்ப்பிணி பெண்களே..!! லிப்ஸ்டிக் பயன்படுத்துறீங்களா..? கருவுக்கு ஆபத்து..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!