உத்தராகண்ட் மீட்புப் பணிகளை செய்தியாக வெளியிட வேண்டாம்...! மத்திய அரசு அதிரடி
உத்தராகண்ட் மாநிலம் சில்க்யாராவில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் குறித்த செய்திகளைப் பரபரப்பாக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் சுரங்கப் பாதைக்கு அருகிலிருந்து நேரடிப் பதிவுகள், வீடியோப் பதிவுகளை மேற்கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேமராமேன்கள், நிருபர்கள் செயல்பாட்டு தளத்திற்கு அருகில் அல்லது அதைச் சுற்றி செல்வதால் அல்லது உபகரணங்கள் எடுத்துச்செல்வதன் காரணமாக பல்வேறு முகமைகளின் மனித உயிர்காக்கும் நடவடிக்கைகள் எந்த வகையிலும் பாதிக்கப்படவோ அல்லது தொந்தரவு செய்யப்படவோ இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.2 கி.மீ., சுரங்கப்பாதை பகுதியில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் மன உறுதியை நிலைநாட்ட அரசு தொடர்ந்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
41 தொழிலாளர்களைப் பத்திரமாக மீட்கப் பல்வேறு அரசு அமைப்புகள் அயராது உழைத்து வருகின்றன. சுரங்கப்பாதையைச் சுற்றி நடந்து வரும் நடவடிக்கை மிகவும் உணர்திறன் வாய்ந்தது, இதில் பல உயிர்களைக் காப்பாற்றுவதும் அடங்கும். குறிப்பாக மீட்புப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு அருகில் கேமராக்கள் மற்றும் பிற உபகரணங்களை வைப்பதன் மூலம் டிவி சேனல்களின் செயல்பாடுகள் தொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் பிற படங்களை ஒளிபரப்புவது தற்போது நடைபெற்று வரும் நடவடிக்கைகளை மோசமாக பாதிக்கும்.
குறிப்பாக தலைப்புச் செய்திகள், வீடியோக்கள் மற்றும் படங்களை வெளியிடுவதில் டிவி சேனல்கள் எச்சரிக்கையாகவும் உணர்பூர்வமாகவும் இருக்க வேண்டும் என்றும், செயல்பாட்டின் உணர்திறன் தன்மை, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொதுவான பார்வையாளர்களின் உளவியல் நிலை ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது