முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உயிரோடு விளையாடும் உணவுகள்..!! தெரியாமல் கூட இதையெல்லாம் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடாதீங்க..!!

In this post, we will look at 5 foods that are more likely to cause cancer due to overheated cooking.
05:10 AM Oct 24, 2024 IST | Chella
Advertisement

பொதுவாக புதிதாக சமைத்த உணவுகள் எப்போதும் உடலுக்கு நல்லது தான். ஆனால், காலையில் சமைத்த உணவை இரவு வரையோ அல்லது இரவு செய்த உணவை காலையிலேயோ மீண்டும் சூடுபடுத்துகிறோம். இந்த பழக்கம் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும். எனவே, அதிகமாக சூடுபடுத்தி சமைப்பதால் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்புள்ள உணவுகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

Advertisement

பதப்படுத்தப்பட்ட இறைச்சி : ஹாட் டாக் (தொத்திறைச்சி), சாசேஜ்கள், சோள மாட்டிறைச்சி அல்லது ஹாம் போன்ற சிவப்பு இறைச்சியை அதிகமாக சமைப்பது அல்லது சாப்பிடுவது புற்றுநோயை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த 2018ஆம் ஆண்டின் ஆய்வின்படி, நைட்ரைட்டுடன் இறைச்சியை சமைப்பதால், புற்றுநோயாக மாறக்கூடிய N-nitroso இவை பொருட்களை வெளியிடுகிறது.

ஏனென்றால், அத்தகைய இறைச்சியை பாதுகாக்க புகைமூட்டம் மற்றும் உப்பு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதைத் தவிர்க்க, புதிதாக வெட்டப்பட்ட இறைச்சியை மட்டும் உட்கொள்ளலாம். இவற்றை அதிகமாகச் சூடுபடுத்தி சமைப்பதற்குப் பதிலாக, பிரஷர் குக்கர் சமையல், பேக்கிங், குறைந்த வெப்பநிலையில் வறுத்தல் அல்லது மண் பானையில் சமைக்கலாம்.

உருளைக் கிழங்கு: உருளைக்கிழங்கை அதிகமாக சமைப்பது புற்றுநோயை உண்டாக்கும். உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் கூற்றுப்படி, உருளைக்கிழங்கை அதிக தீயில் சமைப்பதால் தீங்கு விளைவிக்கும் அக்ரிலாமைடை வெளியிடுகிறது. இதை வேகவைத்து அல்லது குறைந்த தீயில் சமைத்து சாப்பிடலாம்.

மீன் : மீன்களை தேவைக்கு அதிகமாக சமைக்கக் கூடாது. ஏனென்றால், அதில் இருந்து தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் வெளியேற ஆரம்பிக்கும். குறிப்பாக, நீங்கள் அதை வறுக்கிறீர்கள் என்றால், அதை அதிக வெப்பநிலையில் சமைக்கவோ அல்லது அதிகமாக வறுக்கவோ கூடாது. மீன் சாப்பிட வேண்டும் என்றால் ஆவியில் வேக வைத்து அல்லது சமைத்து சாப்பிடுவது நல்லது.

பிரியாணி : அனைவருக்கும் பிடித்த உணவு என்றால், அது பிரியாணியாகத்தான் இருக்கும். ஆனால், நாம் செய்யும் மிகப்பெரிய தவறு பிரியாணியை சூடு படுத்தி சாப்பிடுவது. இப்படிச் சாப்பிடும்போது நமது உணவு மண்டலம் வெகுவாக பாதிப்படைந்து உடல் நலம் கேள்விக்குறியாக மாறிவிடுகிறது.

முட்டை உணவு : முட்டை உணவு வகைகளில் உடலுக்குத் தேவையான புரதம் அதிகம் இருக்கிறது. ஆனால், முட்டையை வைத்து செய்யப்பட்ட உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி உண்டால் அது வாயு கோளாறுகளை ஏற்படுத்தி உடல் ஆரோக்கியத்தை பாதித்து விடுகிறது.

காளான் : காளானில் உள்ள செலினியம் எலும்புகளின் உறுதித் தன்மையை ஊக்குவிக்கிறது. இது இரும்பு சத்து அதிகம் கொண்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் காளான் உணவை மீண்டும் சூடு படுத்துவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல் போன்ற வயிற்று பிரச்னைகளை உண்டாக்கி உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும்.

கீரைகள் : அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள கீரையை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது. ஏனென்றால், அது ஃபுட் பாய்சனாக மாறிவிடும்.

பீட்ரூட் : இரும்புச்சத்து, வைட்டமின் பி12 சத்துகளை கொண்டிருக்கும் பீட்ரூட் கிழங்கு இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்வதாக கூறப்படுகிறது. இந்த பீட்ரூட்டை பயன்படுத்தி சமைத்த உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடும் பொழுது அவை விஷமாக மாறிவிடும்.

வெள்ளை ரொட்டி : கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை குறைவாக சமைக்க வேண்டும். வெள்ளை ரொட்டியை அதிகமாக சமைப்பது அக்ரிலாமைடு உருவாவதற்கு வழிவகுக்கும். எனவே, ரொட்டியை குறைவான தீயில் சமைக்க வேண்டும்.

எண்ணெய் : பொரிப்பதற்கு அதிக முறை ஒரே எண்ணெய்யை பயன்படுத்துவது புற்றுநோயை உண்டாக்கும். ஏனென்றால், இவ்வாறு செய்வது எண்ணெய்யில் தீங்கு விளைவிக்கும் கலவைகளை உருவாக்குகிறது. எண்ணெய் மீதமாக இருந்தால், அதை வடிகட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்து மீண்டும் பயன்படுத்தலாம்.

Read More : ஐபிஎல் 2025 போட்டியில் களமிறங்குவாரா தோனி..? வரும் 31ஆம் தேதி வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..?

Tags :
இறைச்சிஉணவுகள்உருளைக் கிழங்குஎண்ணெய்ரொட்டி
Advertisement
Next Article