மறந்து கூட நைட் டைம்ல இந்த காய்கறிகளை சாப்பிடாதீங்க! சாப்பிட்டா பிரச்சனை தான்..
உணவு என்பது நம்முடைய உடலின் செயல்பாட்டுக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவி செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் நாமோ உணவு நம்முடைய நாக்கையும் திருப்திப்படுத்த வேண்டும் என்று மட்டும் யோசிக்கிறோம். அதனால் தான் சுவையான உணவுகளாகத் தேடித்தேடி சாப்பிடுகிறோம். அப்படி சாப்பிடுவது தான் அஜீரணக் கோளாறு, வாயுத்தொல்லை என்று ஆரம்பித்து பிறகு ரத்த அழுத்தம், உயர் கொலஸ்டிரால், இதய நோய்கள் வரை பாதிப்பை உண்டாக்குகின்றன.
காய்கறிகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. காரணம், இவற்றில் இருக்கும் பல வகையான சத்துக்கள், உடலை ஆரோக்கியமாக வைத்து, நோய்கள் வராமல் தடுக்கிறது, ஆனால், இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத சில காய்கறிகள் உள்ளன. நீங்கள் அவற்றை சாப்பிட்டால் உடனே நிறுத்துங்கள். அவை உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை உண்டாகும்.
பூண்டு: இரவில் நிம்மதியாக தூங்க வேண்டும் என்றால், பூண்டை சாப்பிடாதீர்கள். இல்லையெனில் வயிற்றில் வாயு, வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
தக்காளி: இதையும் இரவு நேரத்தில் அதிகளவு எடுத்துக்கொள்ள கூடாது. மீறினால், வயிறு தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கும். காரணம், அமில பண்புகள் இதில் உள்ளன. இது மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும். இதனால் தூங்குவதில் சிரமம் ஏற்படும்.
வெங்காயம்: இது ஆரோக்கியத்திற்கு நல்லதாக கருதப்பட்டாலும், இரவில் அதிகமாக எடுத்துக்கொண்டால், தூக்கம் வராது. அதுமட்டுமின்றி,
வயிற்று உப்புசம் பிரச்சனையும் வரும்.
ப்ரோக்கோலி: இதில் இருக்கும் டிரிப்டோபான் என்ற பண்பு தூக்கம் கெடுக்கும். மேலும், இதில் ஏராளமான நார்ச்சத்துக்கள் இருப்பதால், இதை இரவு உணவில் எடுத்துக் கொண்டால் ஜீரணமாவது கடினம்.
பச்சை பட்டாணி: இதில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் இது, ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்றாலும், இரவில் சாப்பிட்டால், வயிற்றில் வீக்கம் மற்றும் வாயு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். அதுமட்டுமின்றி, இது செரிமான அமைப்பில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். காரணம் இதில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது.
இனிப்பு உருளைக்கிழங்கு: இதில் அதிகளவு கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து இருப்பதால், இரவில் எடுத்துக்கொண்டால், வீக்கம் மற்றும் வாயு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
Read more ; “எங்கள் கலாச்சாரத்தில் நாங்கள் நிர்வாணத்தை ஏற்க மாட்டோம்” – நைஜீரிய முதல் பெண்மணி விமர்சனம்!