ஹேர் கட்டிங்கிற்கு ஆண்கள் இவ்வளவு செலவு செய்கிறார்களா?… அதிக செலவாகும் நாடு எது?
பொதுவாக ஆண்கள் அதிகபட்சமாக தங்களை அழகுப்படுத்தி கொள்ள செலவிடுவது முடிதிருத்தம் செய்வதற்காக தான் இருக்கும். அந்த வகையில் உலகளவில் ஆண்கள் முடி திருத்தம் செய்ய அதிகம் செலவாகும் நாடுகள் குறித்த பட்டியலை வேர்ல்டு ஸ்டேட்டிக்ஸ் டிவிட்டர் பக்கம் வெளியிட்டது. உலகிலேயே ஆண்கள் முடி திருத்தத்திற்கு அதிக செலவிடும் நாடுகள் பட்டியலில் நார்வே முதலிடம் பிடித்துள்ளது. அங்கு முடி வெட்ட ஒருவர், சராசரியாக 64.60 அமெரிக்க டாலர், ரூபாய் மதிப்பில் 5,380 செலவிடுகிறார்களாம். இந்த பட்டியலில் 2வது இடம் பிடித்துள்ள ஜப்பானில் முடி திருத்தம் செய்வதற்கு சராசரி கட்டணமாக 56 டாலராக உள்ளது. இது ரூபாய் மதிப்பில் ரூ.4,664 ஆகும்.
3வது இடம் பிடித்துள்ள டென்மார்க்கில் சராசரி முடி திருத்த கட்டணம் 48.21 டாலராக(ரூ.4015) உள்ளது. ஸ்வீடனில் முடி திருத்தம் செய்ய சராசரி கட்டணம் 46.13 டாலராக(ரூ.3842) உள்ளது. 5வது இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியாவில் முடி திருத்ததிற்கு சராசரி கட்டணம் 46 டாலராக(ரூ.3831) உள்ளது. அமெரிக்காவில் முடி திருத்தம் செய்ய சராசரி கட்டணம் 44 டாலராக(ரூ.3664) உள்ளது. சுவிட்சர்லாந்தில் முடி திருத்தத்திற்கு சராசரி கட்டணம் 42.96 டாலராக(ரூ.3578) உள்ளது. 8வது இடம் பிடித்துள்ள பிரான்சில் சராசரி முடி திருத்த கட்டணம் 37.05 டாலராக(ரூ.3085) உள்ளது. தென்கொரியாவில் சராசரி முடி திருத்த கட்டணம் 36.94 டாலராக(ரூ.3076) உள்ளது.
பிரிட்டனில் சராசரி முடி திருத்த கட்டணம் 35.74 அமெரிக்க டாலராக(ரூ.2976) உள்ளது. 35வது இடம் பிடித்துள்ள இந்தியாவில் சராசரி முடி திருத்த கட்டணம் 5.29 டாலர் அதாவது ரூபாய் மதிப்பில் 437 ஆக உள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில் சராசரி முடி திருத்த கட்டணம் 4.44 டாலர், அதாவது ரூபாய் மதிப்பில் 366 ஆக உள்ளது. மிகவும் குறைந்த சராசரி முடி திருத்த கட்டணம் உள்ள நாடாக ஜாம்பியா உள்ளது. அங்கு 1.65 டாலர் டாலர்(ரூ.137) கட்டணமாக உள்ளது.