’கோவையில் எனக்கு பங்களா இருக்கா’..? ’நானே மாமனார் வீட்ல தான் தங்கியிருக்கேன்’..!! அண்ணாமலை சொன்னதை பாருங்க..!!
கோவையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்களாவை வாங்கியிருப்பதாக வெளியான தகவலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தலைமையில் நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் அர்பன் நக்சலான ஆனந்த் டெல்டும்டே ஏன் கலந்து கொள்ள வேண்டும். விஜய், மணிப்பூர் கலவரம் குறித்து பேசிய போது அதற்கு காரணமாக அடிப்படை தகவல்களை தெரிந்து கொண்டு பேச வேண்டும்.
அம்பேத்கரை வைத்து அரசியல் வியாபாரம் செய்வதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். விஜய் உள்பட எந்த அரசியல்வாதிகள் மணிப்பூர் செல்ல நினைத்தாலும் அவர்களோடு நானும் சென்று அங்குள்ள நிலையை விளக்க தயாராக இருக்கிறேன். சிந்தாதிரிப்பேட்டையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் சமாதானம் பேசி வைத்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பனையூரில் வசித்து வருகிறார். கடந்த 2023ஆம் ஆண்டு அண்ணாமலை கட்டியிருந்த காஸ்ட்லி ரபேல் வாட்ச் குறித்த சர்ச்சை எழுந்தது. அப்போது, என்னிடம் சொந்தமாக 4 ஆடுகள் மட்டுமே இருப்பதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதுகுறித்து அப்போது செந்தில் பாலாஜி பேசுகையில், 4 ஆடு மேய்த்தாலே மூன்றே முக்கால் லட்சம் வீட்டு வாடகை தரமுடியுமா? என கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில்தான் தனது வீட்டுக்கான வாடகையை நண்பர்கள் செலுத்துவதாகவும், காருக்கு பெட்ரோலை பாஜக போட்டுவிடுவதாகவும் தெரிவித்திருந்தார்.
கோவையில் நான் பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்களாவை வாங்கியிருப்பதாக வெளியான தகவலுக்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார். கோவையில் பங்களா வாங்கும் அளவுக்கு என் நிதி நிலைமை இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், கோவைக்கு வரும் போதெல்லாம் நான் மாமனார் வீட்டிலேயே தங்கி வருகிறேன் என்றும் என்னை காண வரும் தொண்டர்கள் இடவசதியின்றி வெளியே நிற்கும் நிலை உள்ளது என்றும் கூறியுள்ளார்.
Read More : மாதம் ரூ.40,000 வரை சம்பளம்..!! POWERGRID ஆணையத்தில் வேலை..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!