சுங்கச்சாவடியை தூக்கிவிட்டு ஜிபிஎஸ் முறையில் கட்டணம் வசூல்..!! முதலில் எங்கு அமலாகிறது தெரியுமா..? அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு..!!
இந்தியா முழுவதும் தற்போது ஃபாஸ்ட் டேக் முறையில் சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த முறையை மாற்றி ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் முறையை அமலுக்கு கொண்டு வருவதாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், முதற்கட்டமாக இது எந்த பகுதியில் இது அமல்படுத்தப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் தற்போது கூட்டம் நடந்து வரும் நிலையில், இதில் உறுப்பினர்கள் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் புதிய சுங்க கட்டண வசூல் முறை அமலுக்கு வருவது குறித்த புதிய தகவல் ஒன்றை மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், “கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு மைசூர் இடையேயான தேசிய நெடுஞ்சாலை எண் 275 மற்றும் ஹரியானாவில் உள்ள பானி பட் கிஷார் இடையேயான தேசிய நெடுஞ்சாலை எண் 709 ஆகிய இரண்டு நெடுஞ்சாலைகளிலும் முதற்கட்டமாக ஜிஎன்எஸ்எஸ் அடிப்படையிலான ஜிபிஎஸ் முறை டோல் கட்டண வசூல் அமலுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
அதாவது, தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க சாவடிகளை அமைக்காமல், இந்த சாலைகள் வழியாக பயணிக்கும் வாகனங்களின் நம்பர் பிளேட் கண்காணிக்கப்பட்டு, நேரடியாக அந்த நம்பர் பிளேட் உடன் இணைப்பில் இருக்கும் வங்கிக் கணக்கு எண்ணில் இருந்து பணத்தை கழித்துக் கொள்ளும் முறையை கொண்டு வரப் போவதாக தெரிவித்துள்ளார். இந்த முயற்சி வெற்றி அடையும் பட்சத்தி இந்தியாவில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றிவிட்டு, இந்த தொழில்நுட்பத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு இறங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது சுங்க கட்டணம் முழுவதும் பாஸ்ட் டேக் கார்டு முறையில் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் இந்த கார்டுகளும் நீக்கப்பட்டு ஜிபிஎஸ் அடிப்படையான சுங்க கட்டண வசூல்முறை அமலுக்கு வரவுள்ளது. இதன் மூலம் சாலையில் பயணிக்கும் பயணிகளுக்கும் சுங்க கட்டணம் என்பது குறைவாக இருக்கும். சாலையில் எவ்வளவு தூரம் பயணிக்கிறோமோ அவ்வளவு தூரத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் என்ற சூழ்நிலை உருவாகும்.
Read More : நீங்களும் பிரதமரின் இலவச வீடு திட்டத்தில் பயன்பெற வேண்டுமா..? என்ன தகுதி..? என்ன ஆவணங்கள் தேவை..?