முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"சொன்னது 100 நாள் ஆனால் நடந்தது.. திமுக எப்போதுமே சொல்றத செய்யாது" - ஆளும் கட்சியை விமர்சனம் செய்த ஈபிஎஸ்.!

05:19 PM Feb 22, 2024 IST | 1newsnationuser7
Advertisement

தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் அதன் மீதான விவாதம் நடைபெற்ற பிறகு சட்டப்பேரவை முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல் முறையாக தனது தலைமையில் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார்.

Advertisement

இதற்கான தீவிரமான களப்பணிகளில் அவர் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் தமிழக அரசின் பட்ஜெட்டை புள்ளி விவரங்களுடன் சுட்டிக்காட்டிய அவர் பட்ஜெட்டில் இருக்கும் குறைகளைப் பற்றி விமர்சனம் வைத்திருந்தார். விடியல் ஆட்சியை தருவதாக கூறிக்கொண்டு மக்களை துன்பத்தில் ஆழ்த்தும் விடியா அரசு என அவர் ஆளும் திமுகவை விமர்சனம் செய்து வந்தார் மேலும் திமுக அரசு சட்டப்பேரவையை கூட ஒழுங்காக நடத்தவில்லை என குற்றம் சாட்டியிருக்கிறார். சட்டப்பேரவை கூட்டம் ஆரம்பித்த சில நாட்களிலேயே கூட்டத்தை முடித்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

திமுக அரசு எப்போதும் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்று தான் இருக்கும் இந்த முறையும் அப்படியே செய்திருக்கிறார்கள். அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன் 100 நாட்கள் சட்டப்பேரவையை நடத்துவோம் என்று வாக்குறுதி அளித்தார்கள். தற்போது 100 மணி நேரம் கூட நடத்தவில்லை ஏனென்றால் அவர்களால் நடத்த முடியாது. திமுகவினருக்கு எதுவும் தெரியாது . அதனால்தான் மக்கள் இந்த ஆட்சியில் இவ்வளவு கஷ்டங்களை சுமந்து வருகின்றனர். வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் மக்கள் இதற்கு முடிவு கட்டுவார்கள் என தெரிவித்துள்ளார் .

English Summary: DMK will never do what they said. ADMK General Secretary EPS accused DMK for failed to keep their promise.

Tags :
dstalinepsfailed promisestate assemblyதமிழ்நாடு அரசு
Advertisement
Next Article