ஈரோட்டில் திமுக டாப்..!! 3-வது இடத்தை பிடித்த நாம் தமிழர்..!! பரிதாப நிலையில் பாஜக..!!
ஈரோடு தொகுதியில் திமுக வேட்பாளர் பிரகாஷ் முன்னிலை வகித்து வரும் நிலையில், இரண்டாவது இடத்தினை அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பிடித்துள்ளார். 3-வது இடத்தினை நாம் தமிழர் வேட்பாளர் கார்மேகன் பிடித்துள்ளார். பாஜக கூட்டணியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஈரோடு மாநகரம் கொங்கு மண்டலத்தில் உள்ள மிக முக்கியமான நகரம் ஆகும். ஈரோடு நகரம் மஞ்சள் மற்றும் ஜவுளிகளுக்கு உலக புகழ்பெற்ற நகரமாகும். காவிரி ஆற்றங்கரை நகரமான ஈரோடு அதிமுகவின் கோட்டை ஆகும். 2011 மற்றும் 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக இங்கு பெற்ற வெற்றி அசாத்தியமானது. இந்த தொகுதி இதற்கு முன் திருச்செங்கோடு தொகுதியாக இருந்தது. இதில், 1952 தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் எஸ்.கே.பேபி வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து இரு முறை காங்கிரஸ் வென்றுள்ளது.
ஆனால், திமுகவின் எழுச்சிக்கு பின் 1967 முதல் 1998 வரை அதிமுக, திமுக கட்சிகளே இங்கு வெற்றி பெற்றுள்ளன. 1998 லோக்சபா தேர்தலில் திருச்செங்கோட்டில் போட்டியிட்டு முன்னாள் முதல்வர் பழனிசாமி வெற்றி பெற்றார். திருச்செங்கோடு தொகுதி 2009-க்கு பின் ஈரோடு லோக்சபா தொகுதியாக உருவாக்கப்பட்டது. ஈரோடு மேற்கு ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி), காங்கேயம், குமாரபாளையம் ஆகிய ஆறு தொகுதிகள் உள்ளன. ஈரோடு தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 15,28,241 ஆகும் .
தொகுதி மறு சீரமைப்புக்கு பின் கடந்த 2009 லோக்சபா தேர்தலில் காங்கிரஸின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைத் தோற்கடித்து மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி வெற்றிபெற்றார். ஆனால், 2014ஆம் ஆண்டில் அதிமுக வெற்றி பெற்றது. அதிமுக சார்பில் செல்வகுமார் சின்னையன் வெற்றி பெற்றார். ஆனால், 2019 தேர்தலில் மீண்டும் மதிமுகவின் கணேச மூர்த்தி வெற்றி பெற்றார். 2024 தேர்தலை பொறுத்தவரை அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிட்டர். திமுக சார்பில் பிரகாஷும், பாஜக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் விஜயகுமார் போட்டியிட்டனர். நாம் தமிழர் கட்சி சார்பில் கார்மேகன் போட்டிட்டுள்ளார்.
அதிமுக சார்பில் போட்டியிட்ட அசோக்குமார் மற்றும் திமுக சார்பில் போட்டியில் பிரகாஷ் இடையே ஆரம்பத்தில் கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், தற்போதைய நிலையில் திமுக வேட்பாளர் பிரகாஷ் 24,822 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 17,177 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் கார்மேகன் 4,922 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். பாஜக கூட்டணி சார்பில் களம் இறங்கிய தமாகா வேட்பாளர் விஜயகுமார் 3317 வாக்குகள் பெற்று 4வது இடத்தை பிடித்துள்ளார்.
Read More : Lok Sabha Election Results 2024 | தருமபுரியில் பாமகவின் சௌமியா அன்புமணி, நடிகை கங்கனா ரணாவத் முன்னிலை..!!