For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BJP | "மண்டைய மறைச்சீங்களே; கொண்டைய மறைச்சீங்களா.?" பாஜகவினரை கலாய்த்த திமுக தொண்டர்கள்.!!

04:34 PM Apr 25, 2024 IST | Mohisha
bjp    மண்டைய மறைச்சீங்களே  கொண்டைய மறைச்சீங்களா    பாஜகவினரை கலாய்த்த திமுக தொண்டர்கள்
Advertisement

BJP: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் 18-வது பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த பொது தேர்தல் வாக்குப்பதிவின் முதல் கட்டம் கடந்த 19ஆம் தேதி தமிழகம் பாண்டிச்சேரி உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றது . 102 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இந்த பொது தேர்தல் வாக்கெடுப்பில் பல கோடிக்கணக்கான வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை செலுத்தினர்.

Advertisement

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவில் தமிழகத்தில் 69.46 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இது தொடர்பாக பல குளறுபடிகள் நடைபெற்று வந்த நிலையில் இறுதியாக தேர்தல் ஆணையம் 69.46 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருக்கிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவின் போது கோயம்புத்தூர் தொகுதியில் 1 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக புகார் தெரிவித்த அண்ணாமலை கோவை பாராளுமன்ற தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஒரே வாக்குச்சாவடியில் 830 நபர்களின் வாக்குகள் நீக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஒரு பூத்துக்கு 20 ஓட்டுகள் நீக்கப்பட்டு இருக்கிறது. பாஜகவின் ஓட்டுகள் திட்டமிட்டு நீக்கப்பட்டு இருக்கின்றன. தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது.? என கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து தங்கள் ஓட்டுக்களை காணவில்லை எனக் கூறி பாஜகவினர்(BJP) பெருமளவில் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் இந்தப் போராட்டங்களில் கலந்து கொண்ட அனைவரது கையிலும் ஓட்டு போட்டதற்கான மை இருந்ததை காண முடிந்தது. இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஓட்டு போட்டு விட்டு வேண்டுமென்றே பாஜக ஆர்ப்பாட்டம் செய்கிறது என திமுகவினர் கிண்டல் செய்து வருகின்றனர். மண்டையை மறைத்த நீங்கள் கொண்டையை மறைத்தீர்களா என்ற ரேஞ்சுக்கு திமுகவினர் கலாய்த்து வருகின்றனர்.

Read More: Bihar | பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து.!! 6 பேர் பலி.!! 30 க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்பு.!!

Advertisement