For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Election: திருச்சியில் பரபரப்பு.!! அதிமுக நிர்வாகிகளுக்கு கத்தி குத்து..!! திமுக நிர்வாகிகள் அடாவடி.!!

02:39 PM Apr 10, 2024 IST | Mohisha
election  திருச்சியில் பரபரப்பு    அதிமுக நிர்வாகிகளுக்கு கத்தி குத்து     திமுக நிர்வாகிகள் அடாவடி
Advertisement

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Advertisement

இந்த வருட பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கட்சி மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியுடன் தங்களது கூட்டணியை முறித்து கொண்டது. தொண்டர்களின் அதிருப்தியை தொடர்ந்து பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். மேலும் அதிமுக தங்களது தலைமையில் தேமுதிக புதிய தமிழகம் கட்சி எஸ் டி பி யை உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர் கொள்ள இருக்கிறது.

அதிமுக கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களது கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர்களுக்காக தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி லால்குடி அருகே அதிமுக மற்றும் திமுக தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் அரசியல் வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி மாவட்டம் லால்குடியில் திமுக மற்றும் அதிமுக தொண்டர்களிடையே கட்சிக்கொடி தொடர்பாக ஏற்பட்ட மோதல் கத்தி குத்து வரை சென்றிருக்கிறது. இந்த மோதலில் திமுக நிர்வாகிகள் அதிமுக நிர்வாகிகளை கத்தியால் குத்தி காயப்படுத்தி இருக்கின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது. தேர்தலில் அசம்பாவிதம் நிகழுமோ இன்று அச்சப்படும் அளவிற்கு இந்த மோதல் சம்பவம் பார்க்கப்படுகிறது.

Read More: BREAKING | தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி திரையரங்குகள் மூடல்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Advertisement