Lok Sabha 2024 | "திமுக கூட்டணி எம்பி சொத்து பல மடங்காக உயர்ந்தது எப்படி.?"… கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகள்.!!
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது . பொதுத்தேர்தல் வாக்கு சேகரிப்பு பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தங்கள் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களுக்காக தலைவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
வேட்பு மனு தாக்கல் செய்யும் தேதி முடிவடைந்ததை தொடர்ந்து ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை பூத் ஸ்லிப் விநியோகிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதை தொடர்ந்து அவர்களது சொத்துக்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் மதுரை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் எழுத்தாளர் சு வெங்கடேசன் அவர்களின் சொத்து மதிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.
2019 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியில் மதுரையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சூ வெங்கடேசன். கடந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தபோது இவரது சொத்து மதிப்பு 13 லட்சம் ரூபாய் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போதைய தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்த போது இவர் தனது சொத்து மதிப்பு 2 கோடி ரூபாய் என குறிப்பிட்டு இருக்கிறார். கடந்த ஐந்து வருடங்களில் இவரது சொத்து மதிப்பு 15 மடங்காக அதிகரித்திருப்பது எப்படி என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.