முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

18 வயது இளம்பெண்ணை சிகரெட்டால் சூடுவைத்து துன்புறுத்திய திமுக எம்எல்ஏ மகன்..!! அண்ணாமலை பரபரப்பு புகார்..!!

02:21 PM Jan 18, 2024 IST | 1newsnationuser6
Advertisement

18 வயதே ஆன பட்டியல் சமூக இளம்பெண்ணை கடுமையாக தாக்கியும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்திய திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ. கருணாநிதி அவர்களின் மகன் வீட்டில் வேலை செய்த, 18 வயது பட்டியல் சமூக இளம்பெண், கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளால் கடுமையாகத் தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

மருத்துவக் கல்வி பயில உதவியாக இருக்கும் என்பதற்காகவும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும், வீட்டு வேலை செய்ய வந்த இளம்பெண்ணை, கொடூரமாகத் தாக்கியிருப்பது திமுக என்ற அதிகாரத் திமிரையே காட்டுகிறது. மாதம் ரூ.16,000 ஊதியம் என்று கூறிவிட்டு, ரூ.5,000 மட்டுமே இத்தனை மாதங்களாக வழங்கியிருக்கிறார்கள் என்றும் தெரிய வருகிறது.

உடனடியாக, விரைவான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்" என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Tags :
அண்ணாமலைதிமுக
Advertisement
Next Article