கூட்டணியை அறிவித்தது திமுக தலைமை..!! தெலங்கானாவில் பிரச்சாரம் செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
11:08 AM Nov 21, 2023 IST
|
1newsnationuser6
Advertisement
தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி தொடரும் என்று திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Advertisement
தெலங்கானாவில் உள்ள அனைத்து திமுக அமைப்புகளும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுமாறும், தேர்தல் பணிக்குழு அமைத்து காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. நவம்பர் 30ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக தலைமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தெலங்கானா முதல்வரும், பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவுடன் நட்பு கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா காங்கிரஸ்-க்கு வாக்களிக்க பிரச்சாரம் செய்கிறார்.
Next Article