முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டுத் தொடர்... முக்கிய மசோதாவை எதிர்த்து குரல் கொடுக்க போகும் திமுக...!

DMK leader Balu has said that he will insist in Parliament that the Waqf Board Amendment Bill be withdrawn.
05:50 AM Nov 25, 2024 IST | Vignesh
Advertisement

வக்பு வாரிய திருத்தச்சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்த உள்ளதாக திமுக எம்.பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

Advertisement

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி டி.ஆர்.பாலு; மத்திய அரசுக்கு கிடைக்கும் மேல் வரி மற்றும் செஸ் வரிகளை மாநில அரசுகளுக்கு பிரித்தளிப்பது கிடையாது. இது மிகவும் கொடுமையான ஒன்று. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேச உள்ளோம். நிதிப்பகிர்வு திட்டத்தை பரிசீலித்து, ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளோம். தமிழகத்துக்கான நிறைய ரயில்வே திட்டங்கள் அறிவிக்கப்பட்டு கிடப்பில் உள்ளன. அதனை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். தற்போது நடைபெற்று வரும் ரயில்வே திட்டங்களுக்கு கூட சரியாக நிதி அளிப்பதில்லை.

மேலும் வக்பு வாரிய திருத்தச்சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்த உள்ளோம். வேலைவாய்ப்பு இல்லாததால் வாழ்வாதாரமின்றி இளைஞர்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். புதிய வேலைவாய்ப்புகளை அளிக்கும் தொழில் நிறுவனங்களை ஏற்படுத்த வேண்டும். அதுவரை படித்த இளைஞர்களுக்கு வேறு உதவிகளை செய்ய வேண்டும் என்று பேச உள்ளோம். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற நிலைப்பாடு இருக்கக் கூடாது. அதை திரும்ப பெற வேண்டும். மணிப்பூரில் ஓராண்டாக பிரச்சினை உள்ளது. பிரதமர் அங்கு சென்று பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்த உள்ளோம்.

Tags :
BJPDmkone nation one electionparliamenttr balu
Advertisement
Next Article