For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

DMK: அண்ணாமலை முடிவுக்காக காத்திருக்கும் திமுக!… இந்த தொகுதியில் நேரடியாக களமிறங்க திட்டம்!

06:43 AM Mar 12, 2024 IST | 1newsnationuser3
dmk  அண்ணாமலை முடிவுக்காக காத்திருக்கும் திமுக … இந்த தொகுதியில் நேரடியாக களமிறங்க திட்டம்
Advertisement

DMK: கோவை மக்களவை தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட்டால் அதற்கேற்ப வேட்பாளரை நிறுத்தும் முடிவில் திமுக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

திமுக மற்றும் திமுக கூட்டணியை சேர்த்து வீழ்த்த வேண்டும் என்பதில் பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அந்தவகையில், கோவை தொகுதியை பற்றின சில செய்திகள் கசிந்து வருகின்றன. தமிழக பாஜகவுக்கு, செல்வாக்கு நிறைந்த பகுதிகள் என்று சொல்லக்கூடிய 10 தொகுதிகளில் முதன்மையாக உள்ளவை கோவை மற்றும் தென்சென்னை தொகுதிகள் ஆகும். இந்த தென்சென்னையை பொறுத்தவரை, பிராமணர்கள் அதிகளவில் வசிக்கும் தொகுதியாகும்.

இதை தவிர, முதலியார், மீனவர்கள், தலித்துகள் எனப் பலதரப்பட்ட மக்களையும் உள்ளடக்கியிருக்கிறது. அரசு ஊழியர்கள், ஐடி ஊழியர்கள் என்று படித்தவர்கள் எண்ணிக்கையும் இந்த தொகுதியில்தான் அதிகம்… நகர்ப்புறமும், கிராமமும் என எல்லா தரப்பு மக்களும் வசிப்பது இந்த தொகுதியில்தான் என்பதால், வாக்குகள் ஒரே இடத்தில் குவியும் என்று எதிர்பார்க்க முடியாது. எனினும், பாஜகவுக்கு "கை" கொடுத்து உதவக்கூடிய தொகுதியாகும். இந்த முறையும், இந்த தென்சென்னையில் மிகுந்த நம்பிக்கையை வைத்திருக்கிறது.. காரணம், பிராமண சமூகத்தின் ஓட்டுக்கள் நிச்சயம் தன்னை காப்பாற்றும் என்று நம்புகிறது.

கோவை தொகுதியில் கடந்த 2019ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து நின்று 11 சதவீத வாக்குகளை வாங்கி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. ஆனால், தற்போது கமல்ஹாசன் திமுக கூட்டணியில் இணைந்துள்ளார். இருப்பினும், கமல்ஹாசனுக்கு ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, மேல்-சபை எம்.பி. பதவி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் கோவையை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியதை போல் அல்லாமல், இந்தமுறை திமுகவே நேரடியாக களமிறங்க ஆயத்தமாகி வருகிறது. இதற்காகவே கோவை மக்களவை தொகுதியை விரும்பி கேட்ட கமலுக்கு மாநிலங்களவை சீட்டை கொடுத்து திமுக சைலண்ட் ஆக்கியதாக கூறப்படுகிறது. அதாவது, கோவை மக்களவை தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட்டால் அதற்கேற்ப வேட்பாளரை நிறுத்தும் முடிவில் திமுக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Readmore:  பனை ஏறும் இயந்திரத்தை கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் வழங்கப்படும்…! அரசு சூப்பர் அறிவிப்பு…!

Tags :
Advertisement