Lok Sabha | "பெண்கள் பளபளப்பிற்கு காரணம் திமுக கொடுத்த 1,000/- ரூபாய் தான்"… வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் சர்ச்சை பேச்சு.!!
Lok Sabha: திமுக(DMK) கொடுத்த மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாய் தான் பெண்கள் பளபளப்பாக இருப்பதற்கு காரணம் என வேலூர் எம்பி கதிர் ஆனந்த் பேசியிருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
2024 ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்தல்(Lok Sabha) வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி முடிவடைகிறது.7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆகியவை மோத இருக்கின்றன. இந்த பொது தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது.
தமிழகத்தில் திமுக(DMK) தலைமையில் காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மதிமுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை இணைந்து போட்டியிடுகின்றன. மறுபுறம் அதிமுக தலைமையில் தேமுதிக எஸ்டிபிஐ புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொள்கிறது. மூன்றாவது அணியாக பாஜக தலைமையில் பாமக அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன.
நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிந்த நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் திமுக போட்டியிடும் தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலும் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுகவின் சார்பாக எம்பி கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார்.
வேலூர் தொகுதிக்குட்பட்ட குடியாத்தம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அவர் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பெண்கள் அழகாக பொலிவுடன் பளபளப்பாக இருப்பதற்கு திமுக அரசு வழங்கும் மகளிர் உரிமைத்தொகை 1,000 ரூபாய் தான் காரணம் என இவர் பேசியிருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரச்சாரத்தின் போது பேசிய அவர் அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாயில் பேர் & லவ்லி மற்றும் பிரான்ஸ் பவுடர் ஆகியவற்றை வாங்கி பெண்கள் பூசி கொள்வதால் அழகாகவும் பளபளப்பாகவும் இருப்பதாக கூறியிருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக எம்பி கதிர் ஆனந்த் தனது பேச்சின் மூலம் பெண்களை கொச்சைப்படுத்தியதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளது.