முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"திமுக செய்வது தான் வாரிசு அரசியல்" மகன் அரசியல் வருகை குறித்து இபிஎஸ் புது விளக்கம்.!

02:12 PM Feb 21, 2024 IST | 1newsnationuser7
Advertisement

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி பற்றிய பேச்சு வார்த்தையில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி அதிமுக கூட்டணி பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது. எத்தனை போட்டிகள் இருந்தாலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக தேர்தல் கணிப்புகள் தெரிவிக்கிறது.

Advertisement

எதிர்க்கட்சியான அதிமுக பாராளுமன்றத் தேர்தலில் தங்களது பலத்தை நிரூபிப்பதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆளும் திமுக அரசிற்கு எதிரான மக்களின் எதிர்ப்பலை தங்களுக்கு வெற்றியை கொடுக்கும் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். பிஜேபி உடனான கூட்டணி முடிவிற்கு பிறகு அதிமுக சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பதால் அந்தக் கட்சியின் நிர்வாகிகள் தீவிரமான களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட் பற்றி கடும் விமர்சனங்களை முன்வைத்த எடப்பாடி பழனிச்சாமி விடியா அரசால் தமிழக மக்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார். மேலும் வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் அதற்கான விளைவை திமுக அரசு சந்திக்கும் என தெரிவித்துள்ளார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக கட்சியில் இருந்த ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தங்கள் வாரிசுகளை களம் இறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி திராவிட முன்னேற்றக் கழகத்தை போன்று ஒரு குடும்பமே ஒரு கட்சியில் அதிகாரம் செலுத்துவது தான் வாரிசு அரசியல் என புதிய விளக்கம் கொடுத்திருக்கிறார். தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது வாரிசு அரசியல் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

English Summary: EPS giving a new explanation to dynasty politics, and he indirectly points out that DMK is doing that for years.

Advertisement
Next Article