Bond: ரூ.1,230 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வாங்கிய திமுக...!
அதிமுகவை விட திமுக அதிக அளவில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை பெற்றுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எஸ்பிஐ வங்கி அளித்த தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு மீண்டும் வரவுள்ள நிலையில் இந்த பட்டியல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில், ஏப்ரல் 12, 2019 முதல் ரூ. 1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி ஆகிய மூன்று மதிப்புள்ள பத்திரங்களை வாங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகிய விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் இரண்டு பட்டியல்கள் உள்ளன. முதலாவதாக, தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்கள், தொகை மதிப்பு மற்றும் தேதிகளுடன் வெளியிடப்பட்டுள்ளன. மற்றொன்றில் அரசியல் கட்சிகளின் பெயர்கள் மற்றும் பத்திரங்களின் மதிப்புகள் மற்றும் அவை பணமாக்கப்பட்ட தேதிகள் உள்ளன.
ஸ்பைஸ் ஜெட் ஜேகே சிமெண்ட் டி எல் எப் டாக்டர் ரெட்டிஸ் லிபரட்டரி ஐடிசி பஜாஜ் ஏர்டெல் என பல முக்கிய நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிக்கு நன்கொடை வழங்கி உள்ளது. உத்தராகண்ட் சுரங்க இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகி 41 தொழிலாளர்கள் 17 நாட்களுக்கு மேலாக சிக்கி இருந்த சுரங்கத்தை கட்டி வந்த நிறுவனமான நவ யுகா நிறுவனமும் கோடிக்கணக்கில் அரசியல் கட்சிக்கு தேர்தல் பத்திரங்களாக நன்கொடை வழங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து திமுக,அதிமுக இரண்டு கட்சிகளும் தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெற்றுள்ளது. ஒப்பிட்ட அளவில் அதிமுகவை விட திமுக அதிக அளவில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை பெற்றுள்ளது. திமுக ரூ.1230 கோடி ரூபாய் அளவில் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையில் பெற்றுள்ளது.
லாட்டரி மாட்டினின் நிறுவனமான பியூச்சர் கேம்மிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனம் பல்வேறு காலகட்டங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது. இதே காலகட்டத்தில் அமலாக்க துறையின் வழக்கு விசாரணை வளையத்திற்குள் இருந்தார் லாட்ரி மாட்டின்.அவருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்திருந்தது இதே காலகட்டத்தில் தான்