முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

DRUG முன்னேற்ற கழகமாக மாறிவிட்டது திமுக!... ஓட ஓட விரட்டவேண்டும்!... நிர்மலா சீதாராமன் விளாசல்!

05:44 AM Apr 14, 2024 IST | Kokila
Advertisement

DMK என்று அழைக்கப்படும் திமுக, DRUG முன்னேற்றக் கழகமாக மாறிவிட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன விமர்சித்துள்ளார்.

Advertisement

தஞ்சாவூரில் பாஜக வேட்பாளர் கருப்பு எம். முருகானந்தத்தை ஆதரித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாகன பேரணி மூலம் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், தஞ்சாவூர் பல எழுத்தாளர்களையும், இசைக் கலைஞர்களையும் உருவாக்கிய மண். இங்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு கஜா புயல் வீசி விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டபோது, நானும், இங்கு போட்டியிடும் கருப்பு முருகானந்தமும் பல உதவிகளை செய்து அவர்களது வாழ்வாதாரத்தை மீட்டுள்ளோம்.

கச்சத்தீவு விவகாரத்தை ஏன் இப்போது பேச வேண்டும் என்கிறார்கள். கச்சத்தீவை திமுக தாரைவார்த்து கொடுத்ததால்தான், இன்று வரை மீனவர்கள் பிரச்சினை தீராமல் உள்ளது என்ற உண்மையை அனைவரும் பேச வேண்டும். ‘டிஎம்கே’ என்றழைக்கப்படும் திமுக, ‘டிரக்’ முன்னேற்ற கழகமாக மாறியுள்ளது. போதைப் பொருட்கள் மூலம் திமுகவுக்கு வந்த செருக்கை, ஓட்டு மூலமாக நொறுக்க வேண்டும். திமுகவை நாம் ஓட ஓட விரட்ட தேர்தலில் மக்கள் கருப்பு எம்.முருகானந்தத்தை ஆதரிக்க வேண்டும்” என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

Readmore: பழமையான இந்து கோவிலை இடித்த பாகிஸ்தான்!… வணிக வளாகம் அமைக்க திட்டம்!

Advertisement
Next Article