"திமுக அரசு தோல்வியை ஏற்றுக்கொள்ளட்டும்.! வெள்ளை அறிக்கை எங்கே" - சீமான் கேள்வி.?
தமிழகத்தை தாக்கிய புயல் மற்றும் வெள்ளம் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது கடும் புயல் மழையால் சென்னை தத்தளித்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் திமுக அரசின் நிர்வாக வின்மையை குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர் திமுக அரசை விமர்சித்திருந்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேட்டி அளித்திருக்கும் அவர் கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளில் இருந்து இந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்ளாமல் அரசு இருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
இது தொடர்பாக தனது அறிக்கையில் தெரிவித்திருக்கும் சீமான் இயற்கை பேரழிவை யாராலும் கட்டுப்படுத்த முடியாது ஆனால் முறையான வடிகால் அமைப்பு மற்றும் நீர்வழிப் பாதைகளும் பெருநகரங்களில் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார். 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாதது திமுக அரசின் தோல்வியை குறிப்பதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
மேலும் 4000 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டதாக கூறப்படும் வடிகால் வசதிகள் மற்றும் அதற்கான செலவு தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். நிவாரண பணிகளில் விரைவாக ஈடுபட்டு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு விரைவாக திரும்ப நடவடிக்கை எடுக்கும் படியும் அரசை கேட்டுக் கொண்டிருக்கிறார்.