For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’பச்சை துரோகம் செய்யும் திமுக அரசு’..!! ’இப்படி செய்தால் தமிழ் மண்ணில் இன்னொரு மொழிப்போர் வெடிக்கும்’..!! சீமான் பரபரப்பு அறிக்கை..!!

Dravidian model to impose trilingual policy? Seeman has issued a statement criticizing the DMK.
10:16 AM Nov 04, 2024 IST | Chella
’பச்சை துரோகம் செய்யும் திமுக அரசு’     ’இப்படி செய்தால் தமிழ் மண்ணில் இன்னொரு மொழிப்போர் வெடிக்கும்’     சீமான் பரபரப்பு அறிக்கை
Advertisement

மும்மொழி கொள்கையைத் திணிப்பதுதான் திராவிட மாடலா? என்று திமுகவை விமர்சித்து சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

அதில், "வன்முறைக்கு இலக்காகும் பெண்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்படும் தனி மையத்தில் பணிபுரிய தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழி தெரிந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று திமுக அரசு அறிவிப்பு வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இருந்தே தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையே நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்தியாவை ஆண்ட அன்றைய காங்கிரஸும் அதற்குத் துணை நின்ற தமிழ்நாட்டை ஆண்ட காங்கிரஸ் அரசும் இந்தி மொழியை வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் கட்டாயப் பாடமொழியாகத் திணிக்க முயன்றபோது, துணிந்து எதிர்த்து நின்று போரிட்டு வென்றது தமிழர் மண். திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆண்ட கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் இருமொழிகொள்கையை நடைமுறைப்படுத்தி, பல தலைமுறைகள் பாடம் பயின்று பட்டம் பெற்றுள்ள நிலையில், தற்போது இந்தி தெரிந்தால்தான் வேலைவாய்ப்பு என்று திமுக அரசு அறிவித்திருப்பது பச்சைத்துரோகம் இல்லையா?

தமிழ்நாட்டுப் பெண்களுக்கு உதவ தமிழ், ஆங்கிலம் தெரிந்திருந்தால் மட்டும் போதாதா? இந்தி தெரிந்திருக்க வேண்டுமா? தமிழ்நாட்டில் இந்தி தெரிந்த பெண்கள் மட்டும்தான் வந்து வாழ்கிறார்களா? அப்படிப் பார்த்தால் அவர்களுக்கு உதவ அந்தந்த மொழிகள் தெரிந்த பெண்களை நியமிக்க வேண்டி வருமே? அதனால்தான் தமிழ்நாட்டில் தொடர்புகொள்ள தமிழ், இதர மாநில மக்களைத் தொடர்புகொள்ள ஆங்கிலம் என்பதுதானே அண்ணா நாடாளுமன்றத்தில் முழங்கியது? அண்ணாவின் அத்தகைய இருமொழி கொள்கையைக் காற்றில் பறக்கவிடுவதுதான் திராவிட மாடலா?

ஏற்கனவே பாஜக அரசு, தமிழ்நாட்டின் அரசுப்பள்ளிகளுக்குப் போதிய நிதியை ஒதுக்கவில்லை. மோடி அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்கவும், அதன் மூலம் அரசுப்பள்ளிகளில் மும்மொழி கொள்கையைத் திணிக்கவும் திமுக அரசு ஆயத்தமாகி வருகிறது. ஆகவே, மும்மொழி தெரிந்தால்தான் தமிழ்நாட்டின் அரசுத்துறைகளில் வேலைவாய்ப்பு என்கிற திமுக அரசின் மறைமுக இந்தி திணிப்பு நடவடிக்கைகள் யாவும், தமிழ் மண்ணில் இன்னொரு மொழிப்போருக்கே வித்திடும். அந்தத் தீயில் திராவிடம் செய்யும் துரோகங்கள் யாவும் மொத்தமாய் எரிந்து சாம்பலாகும் எனவும் எச்சரிக்கிறேன்” குறிப்பிட்டுள்ளார்.

Read More : ரயில்வே காப்பீடு பற்றி உங்களுக்கு தெரியுமா..? வெறும் 35 பைசா செலுத்தினால் ரூ.10 லட்சம் கிடைக்கும்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tags :
Advertisement