For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ELECTORAL BONDS | "பாவ பணத்தில் அரசியல் செய்யும் திமுக"… தேர்தல் பத்திர விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்.!

09:04 PM Mar 17, 2024 IST | Mohisha
electoral bonds    பாவ பணத்தில் அரசியல் செய்யும் திமுக … தேர்தல் பத்திர விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்
Advertisement

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டதிலிருந்து அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்த தகவல்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

Advertisement

கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்ட தகவல்களில் 2019 ஏப்ரல் மாதம் முதல் 2024 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் வரை தேர்தல் பத்திரங்களின் விநியோகம் தொடர்பான தகவல் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் ஏப்ரல் 12 2019 தேதிக்கு முன்பு உள்ள தகவல்களை எஸ்பிஐ வங்கி உச்சநீதிமன்றத்திடம் சமர்ப்பித்தது. இந்த தகவல்கள் இன்று தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த தகவல்களில் தமிழகத்தில் ஆளும் திமுக தேர்தல் பத்திரங்களின் மூலம் 656 கோடி ரூபாய் தேர்தல் நன்கொடையாக பெற்றிருப்பது வெளியாகி இருக்கிறது. மேலும் லாட்டரி மார்ட்டின் நடத்தி வரும் ஃபியூச்சர் கேம்ஸ் நிறுவனம் திமுகவிற்கு 509 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியதும் வெளியாகி இருந்தது. இந்த தகவல்கள் வெளியானதை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

இது தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி " மக்களின் உயிரை பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனங்களிடமிருந்து திமுக நன்கொடை பெற்றிருக்கிறது. பாவ பணத்தில் திமுக அரசியல் செய்கிறது. சூதாட்ட நிறுவனங்களிடமிருந்து பணத்தைப் பெற்று அரசியல் செய்யும் திமுகவிற்கு வர இருக்கின்ற தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்' என தெரிவித்துள்ளார்.

Read More: GUJARAT | ரம்ஜான் தொழுகை நடத்திய வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்.!! அகமதாபாத்தில் பதற்றம்.!!

Advertisement