முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”கிளி ஜோதிடர் கூறியதை திமுகவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை”..!! அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!!

04:29 PM Apr 09, 2024 IST | Chella
Advertisement

கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, சாலையோரத்தில் இருந்த கிளி ஜோசியரிடம் ஜோசியம் பார்த்துள்ளார். கிளி ஜோசியத்தில், அழகுமுத்து அய்யனார் படம் வந்ததால், வெற்றி பெறுவீர்கள் எனக் கூறியுள்ளார் கிளி ஜோசியர்.

Advertisement

தங்கர் பச்சான் கிளி ஜோசியம் பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ஜோசியரை கைது செய்த வனத்துறையினர் கிளியை கூண்டில் அடைத்து வைத்து ஜோசியம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தங்கர் பச்சானுக்கு ஜோதிடம் கூறிய கிளி ஜோதிடர் கைது செய்யப்பட்டது பழிவாங்கல் நடவடிக்கை என அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தங்கர் பச்சான் வெற்றி பெறுவார் என கிளி ஜோதிடர் கூறியதை திமுகவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் பகுத்தறிவு எனக்கூறும் திமுக, கிளி ஜோதிடர் கைதின் மூலம் மூட நம்பிக்கையிலும் ஊறியிருக்கிறது என குற்றம்சாட்டியுள்ளார்.

Read More : தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்..!! எம்ஜிஆரின் வலது கரம்..!! ஆர்.எம்.வீரப்பன் காலமானார்..!!

Advertisement
Next Article