For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Lok Sabha Election Results 2024 | ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை!!

english summary
11:27 AM Jun 04, 2024 IST | Mari Thangam
lok sabha election results 2024    ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை
Advertisement

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி 1 லட்சம் 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

Advertisement

நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 44 நாட்களில் அடுத்தடுத்த கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில், குஜராத் மாநிலம் சூரத்தில் மட்டும் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மீதமுள்ள 542 தொகுதிகளில் பாஜக கூட்டணி, I.N.D.I.A. கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் பிறக்கட்சியைச் சேர்ந்தவர்கள் களம் கண்டனர். முதல்கட்டத்தேர்தலில் 66.1 சதவிகிதம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் தேர்தலில் முறையே 66 புள்ளி 7 மற்றும் 61 சதவிகித வாக்குகள் பதிவாகின. இதேபோல் நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் கட்டத் தேர்தலில் 67.3, 60.5, 63.4 சதவிகித வாக்குகள் பதிவாகின.

கடைசி கட்டத் தேர்தலில் 62 சதவிகித வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. தேசத்தில் மொத்தம் நாட்டில் வாக்களிக்க தகுதியுடைய சுமார் 97 கோடி பேரில், 64 கோடியே 20 லட்சம் பேர் ஜனநாயக கடமையாற்றியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரியும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி போட்டியிடுவதால் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. மேலும், அந்த தூத்துக்குடி மக்களவை தொகுதியில், அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக விஜயசீலன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக ரொவினா ரூத் ஜென் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் தூத்துக்குடி தொகுதியில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, தூத்துக்குடி வஉசி பொறியியல் கல்லூரியில், இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தற்போது நிலவரப்படி தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் கனிமொழி 1 லட்சத்து 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக - பாஜக கூட்டணி சார்பில், கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டார். இதில் 3,47,209 வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement