முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியிலேயே போட்டி...! திருமாவளவன் அதிரடி அறிவிப்பு...!

DMK alliance to contest in 2026 assembly elections...! Thirumavalavan's dramatic announcement
06:09 AM Dec 16, 2024 IST | Vignesh
Advertisement

கடந்த 7 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருக்கிறோம். எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்தக் கூட்டணியை விட்டு விலகமாட்டோம். திமுக கூட்டணியில் இருந்து எங்களைப் பிரிக்க சனாதன அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. அது நடக்காது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியிலேயே போட்டியிடுவோம் என கும்பகோணத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

Advertisement

கும்பகோணத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்; கடந்த 7 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருக்கிறோம். எந்தக் காரணத்தை கொண்டும் இந்தக் கூட்டணியை விட்டு விலகமாட்டோம். திமுக கூட்டணியில் இருந்து எங்களைப் பிரிக்க சனாதன அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. அது நடக்காது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியிலேயே போட்டியிடுவோம்.

ஏதோ அழுத்தம், மிரட்டல், அச்சுறுத்தல் என்கிறார்கள். என்னோடு நெருக்கமாக இருப்பவர்களுக்கு தெரியும் என்னுடைய இயல்பு, என்னுடைய பண்பு. திருமாவளவன் திமுகவிடம் ஒன்று பேசிவிட்டு மறைமுகமாக ஒன்று செய்கிறார் என சிலர் கூறுகிறார்கள் அந்த அரசியல் எங்களுக்கு தெரியாது. அது எங்களுக்கு தேவையும் இல்லை. எனது நம்பகத்தன்மை மீது கை வைக்கிறார்கள்.

விசிக எப்போதும் சனாதனத்திற்கு எதிராகதான் இருக்கும். அதனால் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டாலும், பேரிழப்பு ஏற்பட்டாலும் அதனை தாங்கிக்கொள்ளும் சக்தியாக விசிக இருக்கும். எந்த சூழ்நிலையிலும் சனாதன சக்திகள் இருக்கும் அணியில் விசிக இடம்பெறாது என்றார்.

Tags :
2026 electionDmkElection alliancemk stalinthirumavalavanvck
Advertisement
Next Article