For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Candidate: வேகமாக பரவிய வீடியோ...! திமுக கூட்டணி கட்சியின் வேட்பாளர் திடீரென மாற்றம்...!

06:10 AM Mar 22, 2024 IST | 1newsnationuser2
candidate  வேகமாக பரவிய வீடியோ     திமுக கூட்டணி கட்சியின் வேட்பாளர் திடீரென மாற்றம்
Advertisement

நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாற்றம். கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அவருக்கு பதிலாக மாதேஷ்வரன் என்பவர் வேட்பாளராக அறிவிப்பு.

Advertisement

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. நாளை மறுநாள் வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது. எனவே தமிழ்நாட்டில் திமுக படுவேகமாக கூட்டணி மற்றும் தேர்தல் பணிகளை இறுதிசெய்துள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். மக்களவைத் தேர்தலில் போட்டியிட, திமுக கூட்டணியிலுள்ள கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அறிவித்துள்ளது. இதன்படி, நாமக்கல் தொகுதியில் சூரியமூர்த்தி போட்டியிடவுள்ளார். இவர் திமுகவின் சின்னமான உதயசூரியனில் களமிறங்கவுள்ளார். 10 ஆண்டுகள் கொமதேக தலைமை நிலைய செயலாளராகவும், 7 ஆண்டுகள் மாநில இளைஞரணி செயலாளராகவும் இருந்தவர் சூரியமூர்த்தி. 2001 மற்றும் 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியிலும், 2006-ல் வெள்ளக்கோவில் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த முறை கொமதேக சார்பில் சின்ராஜ் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில், இம்முறை சூரியமூர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக எஸ்.சூரியமூர்த்தி தொடர்பான பழைய வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வந்தது. அதில் அவர் தாழ்த்தப்பட்ட சாதிக்காரன் கவுண்டர் வீட்டுப் பெண்ணைக் காதலித்து மணம் முடிக்க நினைத்தால் அவனுடைய தாயின் கருவில் வளரும்போது தாயோடு கருவறுப்போம் என்பது போல பேசி இருந்தார். அவரது இந்த பேச்சு நெட்டிசன்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், அது பொய்யான வீடியோ என்றும் தான் அது போல பேசவில்லை என்றும் எஸ்.சூரியமூர்த்தி விளக்கமளித்திருந்தார்.

இந்த நிலையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அவருக்கு பதிலாக தற்பொழுது மாதேஷ்வரன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

Advertisement