ANNAMALAI | "விளம்பரத்தில் சீன கொடி; இந்திய இறையாண்மைக்கு எதிரான திமுக" - அண்ணாமலை கடும் கண்டனம்.!
ANNAMALAI: திமுக விளம்பரத்தில் சீனா கொடி இடம் பெற்றது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்.
தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற என் மண் என் மக்கள் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து மதுரையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பிரதமர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டார்.
தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு விழாக்களில் கலந்து கொண்ட பிரதமர் 17,000 கோடி ரூபாய் மதிப்புள்ளான திட்டங்களை தொடங்கி வைத்தார் இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைய இருக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ராக்கெட் ஏவு தளத்திற்கான அடிக்கல் நாட்டினார் .
இது இந்தியாவில் அமைய இருக்கும் இரண்டாவது ராக்கெட் ஏவுதலமாகும். முதலாவது ராக்கெட் ஏவுதளம் ஆந்திர பிரதேசத்தில் அமைந்திருக்கிறது. இந்த ராக்கெட் ஏவு தளத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள இருக்கும் பிரதமரை வரவேற்பதற்காக தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படங்களுடன் தினசரி பத்திரிகைகளில் விளம்பரம் செய்திருந்தார்.
அந்த விளம்பரத்தில் இடம் பெற்று இருந்த ராக்கெட் சீனா கொடி இடம்பெற்று இருந்ததை தொடர்ந்து மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இது தொடர்பாக தனது X வலைதளத்தில் பதிவு செய்திருக்கும் அண்ணாமலை திமுக அரசு இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக இருக்கும் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறது என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பதிவு செய்த அவர் ஊழலில் திளைத்த திராவிட முன்னேற்றக் கழகத்தால் தான் முதலாவது ராக்கெட் உதலாம் தமிழகத்தில் அமையாமல் போனது எனவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.