தீபாவளி பண்டிகை..!! பட்டாசு வெடிக்க இதுதான் நேரம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!
தீபாவளி தினமான அக்.31ஆம் தேதியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் அனுமதி வழங்கியுள்ளது.
புதுச்சேரியில் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவின்படி, புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் அறிவித்துள்ளது. மருத்துவமனைகள், வழிப்பாட்டு தலங்கள், கல்வி கூடங்கள், நீதிமன்ற சுற்றுவட்டாரங்களில் 100 மீட்டருக்குள் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி திருநாள் என்பது 5 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இது இந்து, சீக்கியம், சைனம் மற்றும் பௌத்தம் மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த பண்டிகை இந்தியா இலங்கை சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் சில ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசை முன்தினம் நரக சதுர்தசி அன்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை நாளன்று கொண்டாடப்படுகிறது. கிரகொரியின் நாட்காட்டி படி அக்டோபர் 17ஆம் தேதியில் இருந்து நவம்பர் 15ஆம் தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது.