For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தீபாவளி பண்டிகை..!! பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்த தெற்கு ரயில்வே..!! மீறினால் சிறை தான்..!!

Southern Railway has issued some important instructions for passengers ahead of Diwali festival.
01:47 PM Oct 23, 2024 IST | Chella
தீபாவளி பண்டிகை     பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்த தெற்கு ரயில்வே     மீறினால் சிறை தான்
Advertisement

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளுக்கு சில முக்கிய அறிவுறுத்தல்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

Advertisement

இது குறித்து தெற்கு ரயில்வே தனது எக்ஸ் பக்கத்தில், ”எளிதில் தீப்பற்ற கூடிய அல்லது பட்டாசுப் பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்லக் கூடாது. இது ரயில்வே சட்டம் 1989 இன் பிரிவு 164 மற்றும் 165 இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். அதையும் மீறி, ரயில்களில் பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு சென்றால் அபராதம் விதிக்கப்படும் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

குறிப்பாக, ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்வது போன்ற செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்று ரயில்வே காவல்துறை எச்சரித்துள்ளது. அந்த வகையில், பட்டாசு கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் நவீன ஸ்கேனர்கள், மெட்டல் டிடெக்டர் உதவியுடன், பயணியரின் உடமைகளை சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அவ்வாறு செயல்பாடுகளில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Read More : நெருங்கும் தீபாவளி பண்டிகை..!! அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பறந்த அதிரடி உத்தரவு..!!

Tags :
Advertisement