முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தீபாவளி பண்டிகை..!! புதுச்சேரியிலும் வந்தது புதிய கட்டுப்பாடு..!! மக்களே கவனம்..!!

07:09 AM Nov 03, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தீபாவளி பண்டிகை வரும் 12ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை அன்று, பொதுமக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஆனால், பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிகளவில் ஏற்படுவதாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Advertisement

இது தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும், பசுமை பட்டாசுகளை தயாரிக்கவும், வெடிக்கவும் உத்தரவிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் இந்தாண்டு தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியிலும் தீபாவளி பண்டிகைக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags :
உச்சநீதிமன்றம்தீபாவளி பண்டிகைபட்டாசு
Advertisement
Next Article