முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தீபாவளி பண்டிகை..!! இந்த தவறை யாரும் பண்ணாதீங்க..!! மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் போட்ட உத்தரவு..!!

On the occasion of Diwali, the Pollution Control Board has advised that firecrackers should be burst only between 6 am and 7 am and between 7 pm and 8 pm.
07:40 AM Oct 21, 2024 IST | Chella
Advertisement

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளிக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால், பட்டாசுகளை வெடிக்கவும், சொந்த ஊருக்கு செல்லவும் மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். தமிழ்நாட்டில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு மறுநாளான வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான், தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதில் கடந்த சில ஆண்டுகளாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, ”கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என கூறியுள்ளது.

பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட, குறைந்த ஒலி மற்றும் குறைந்த காற்று மாசை ஏற்படுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிக்க அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

அதேநேரம், அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகிலும் பட்டாசு வெடிப்பதை தவிர்ப்பது நல்லது” என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

Read More : சென்னை டிசிஎஸ் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க ரெடியா..? சம்பளம் எவ்வளவு..?

Tags :
தமிழ்நாடு அரசுதீபாவளி பண்டிகைமாசுக் கட்டுப்பாட்டு வாரியம்விடுமுறை
Advertisement
Next Article