தீபாவளி பண்டிகை..!! நீங்களும் பட்டாசு கடை வைக்கணுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!
இந்தாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மதுரை மாநகர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பம் உள்ளவர்கள், விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”பட்டாசுக்கடை அமைப்பதற்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நீதிமன்ற அஞ்சல் வில்லையுடன் பூர்த்தி செய்ய வேண்டும். அதனுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்று, கடை அமையவுள்ள இடத்தின் புகைப்படம், கடை அமையவுள்ள இடத்தின் வரைபடம் ஆகியவை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
மேலும், குடும்ப அட்டை அல்லது ஆதார் கார்டு நகல், மாநகராட்சி ரசீது, சம்மந்தப்பட்ட கட்டிடத்திற்கான அலுவலர் மறுப்பின்மை கடிதம் என அனைத்து ஆவணங்களும் 3 நகல்கள் இணைக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.900 செலுத்தி, விண்ணப்பத்தை செப்டம்பர் 4ஆம் தேதி பகல் 1 மணிக்குள் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பங்களை பரிசீலித்து சம்மந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டு, விசாரணைக்குப் பின் காவல்துறை திருப்தியடையும் பட்சத்தில் மட்டுமே உரிமம் வழங்கப்படும் எனவும், சாலையோர கடைகளுக்கு உரிமம் வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : Maths, Science டீச்சர்கள் கவனத்திற்கு..!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்னதை கவனிச்சீங்களா..?