Diwali 2024 : மத்தாப்பாய் மகிழ்ச்சி பொங்கட்டும்.. பாதுகாப்பான தீபாவளிக்கு சில டிப்ஸ்..!!
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் மக்கள், தங்களின் இல்லங்களை அலங்கரித்தும், தீபங்களை ஏற்றி வைத்தும், புத்தாடைகளை அணிந்தும், உற்றார் உறவினர்களுடன் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்து உண்டும், உற்சாகத்துடனும், குதூகலத்துடனும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.
இந்த கொண்டாட்டத்தின்போது மக்கள் ஒருவருக்கொருவர் அன்பான வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வது வழக்கம். இந்த வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம், உறவுகளில் நெருக்கம் ஏற்படுவதுடன், மனக் கசப்புகள் விலகும், நீண்ட நாள் பேசாமல் இருந்தவர்கள் கூட இந்த பண்டிகையைச் சாக்காக வைத்து வாழ்த்து தெரிவித்து உறவைப் புதுப்பித்துக்கொள்வார்கள்.
குடும்பத்தினர், நண்பர்களுடன் சேர்ந்தது மகிழ்ச்சியாக ஒரு நாளை கொண்டாடி மகிழ வேண்டும் என்பதே அனைவருக்கும் விருப்பமாக இருக்கும். நல்ல நாளில் எல்லா வளமும் கிடைக்க வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து மகிழ்வர். பட்டாசு, இனிப்பு கொண்டாட்ட கதைகள் என நிகழும். இந்த நாளை ஆனந்தமாய் கொண்டாட சில டிப்ஸ் இதோ..
பாதுகாப்பான தீபாவளி :
பட்டாசுகள் வெடிக்கும் நேரம் காலை 06.00 மணி முதல் 07.00 மணி வரையிலும் இரவு 07.00 மணி முதல் 08.00 மணிவரையிலும் என்று 2 மணிநேரங்கள் ஒதுக்கியுள்ளதால், இந்த நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.
சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதி 89ன்படி பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது. மேலும் தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, பயன்படுத்துவதோ (வெடிப்பதோ) கூடாது
பட்டாசுகளை எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் வெடிக்காதீர்கள். இருசக்கர, 3 சக்கர மற்றும் 4 சக்கர மோட்டார் வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களின் அருகிலும் பெட்ரோல் சேமித்து வைத்திருக்கும் பெட்ரோல் நிலையங்கள் அருகிலும் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது.
இது மட்டும் பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கு உகந்த வழியில் தீபாவளி கொண்டாட்டத்திற்காக வழி இல்லை. ஆரோக்கியம், நம் அன்பிற்குரியவர்களுடனும் மகிழ்ச்சியான தீபாவளியை கொண்டாட வேண்டும்.
என்னது பட்டாசு வெடித்தால் செடி வளருமா என்று கேட்டால், ஆம். குறைந்த ரசாயனம் உள்ள பட்டாசுகளை வாங்க வேண்டும் என்று வெகு காலமாக சொல்லப்படுகிறது. இதுவே சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காதது. ஒலி மாசுவை குறைப்பதற்கு குறைந்த அளவிலாக பட்டாசுகளை மட்டும் வெடிக்கலாம்.
மண் விளக்குகளை கொண்டு விளக்கேற்றலாம். இல்லையெனில் எல்.ஒ.டொ. விளக்குகளை எரியவிடலாம்.
குறைந்த அளவில் சர்க்கரை உள்ள இனிப்புகளை நண்பர்களுக்கும் குடும்ப உறவுகளுக்கும் பரிசாக அளிக்கலாம். செடிகள், காய்கறி, கீரை விதைகள் உள்ளிட்டவற்றை பரிசாக அளிக்கலாம். பிளாஸ்டிக் இல்லாத பரிசாக இருந்தால் நல்லது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடிக்கும்போது கவனமுடன் பட்டாசு வெடிக்கவும். பட்டாசு வெடிக்கும்போது கதர் ஆடைகள் அணிவது நல்லது. பட்டாசு வெடிக்கும்போது அருகில் ஒரு வாலியில் தண்ணீர் வைத்திருப்பது நல்லது. குழந்தைகளை (12 வயது வரையிலான நபர்களை) தனியாக பட்டாசு வெடிக்க அனுப்ப வேண்டாம். அருகில் இருந்து கண்காணிக்கவும். பாதுகாப்பான தீபாவளி கொண்டாடவும் வேண்டும்.