விவாகரத்து வழக்கு: நேரில் ஆஜராகும்படி நிர்பந்திக்கக்கூடாது..! உயர்நீதிமன்றம் உத்தரவு..!
விவாகரத்து வழக்கில் தம்பதியனரை நேரில் ஆஜராகும்படி குடும்பநல நீதிமன்றங்கள் நிர்பந்திக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த ஒரு தம்பதியனர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக் கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். விசா பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அந்த தம்பதியனரால் சென்னை வர முடியவில்லை. இதனால் காணொலி காட்சி மூலம் ஆஜராகியிந்தனர். ஆனால் குடும்ப நல நீதிமன்றம், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து காணொலியில் ஆஜராகவில்லை எனக் கூறி, அவர்களின் வாக்கு மூலங்களை பதிவு செய்ய மறுத்தது.
குடும்ப நல நீதிமன்றம் வாக்குமூலத்தை பதிவு செய்ய மறுத்த நிலையில், இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, குற்ற வழக்குகளில் தான், குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பிற வழக்குகளில், அதாவது விவாகரத்து வழக்குகளில் காணொலி காட்சி மூலம் ஆஜராக வாய்ப்பளிக்க வேண்டும், அவர்களை நேரில் ஆஜராகும்படி நிர்பந்திக்கக்கூடாது என்று குடும்பநல நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Read More: மாணவர்களே குட்நியூஸ்!. இனி 20 மார்க் எடுத்தாலே போதும் பாஸ்!. அரசு அதிரடி!