For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மீண்டும் ஒரு ஆணவ கொலை..!! மனைவியின் கண் முன்னே கணவனை வெட்டிக் கூறு போட்ட பெண்ணின் சகோதரன்!!

District Superintendent of Police Peroz Khan Abdullah and Deputy Superintendent of Police Subbiah conducted a personal investigation at the spot.
11:53 AM Jul 25, 2024 IST | Mari Thangam
மீண்டும் ஒரு ஆணவ கொலை     மனைவியின் கண் முன்னே கணவனை வெட்டிக் கூறு போட்ட பெண்ணின் சகோதரன்
Advertisement

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே, காதல் திருமணம் செய்த இளைஞரை ஆணவப் படுகொலை செய்த பெண்ணின் சகோதரர்கள் உள்ளிட்ட 3 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisement

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திராநகரை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் கார்த்திக்பாண்டி(26). இவர் சிவகாசி கங்காகுளம் சாலையில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவரும் சிவகாசி அருகே அய்யம்பட்டியை சேர்ந்த பொன்னையா மகள் நந்தியும் காதலித்து வந்தனர். இவர்களது திருமணத்திற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில், சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்த நந்தினி, புதன்கிழமை இரவு வேலை முடிந்து அதே பகுதியில் கணவருக்காக நந்தினி காத்திருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்திக் பாண்டியை இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த கார்த்திக் பாண்டி மனைவி நந்தினி கண் முன்பே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், கொலை செய்யப்பட்ட கார்த்திக் பாண்டி உடலை உடல்கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் சுப்பையா ஆகியோர், சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டனர். இந்த கொலை குறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், காதல் திருமணம் செய்த 8 மாதங்களில் கார்த்திக் பாண்டியை அவரது மனைவி நந்தினியின் சகோதரர்கள் வெட்டிக் கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய நந்தியின் சகோதரர்கள் பாலமுருகன், தனபாலன் மற்றும் அவர்களது நண்பர் சிவா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து ஆணவப் படுகொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more ; தமிழ் புதல்வன் திட்டத்தை செயல்படுத்த ரூ.401 கோடி நிதி ஒதுக்கீடு – அரசாணை வெளியீடு

Tags :
Advertisement