"உனக்கு கணக்கு சொல்லி தரேன்.." என்று சொல்லி சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை.! 73 வயது முதியவருக்கு பரபரப்பு தீர்ப்பு.!
திருச்சி மாவட்டத்தில் குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவருக்கு சிறை தண்டனை விதித்து திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை அடுத்துள்ள காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகள் தற்போது எட்டாம் வகுப்பு ஆறாம் வகுப்பு படித்து வருகின்றனர். கடந்த 2016 ஆம் ஆண்டு ஆரோக்கியதாஸ் என்ற 73 வயது முதியவர் இந்தக் குழந்தைகளுக்கு கணக்கு பாடம் சொல்லிக் தருவதாக கூறி சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் இது பற்றி தெரிவிக்கவே அவர்கள் திருவெறும்பூர் மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். இந்தப் புகாரை விசாரித்த காவல்துறை அதிகாரிகள் முதியவர் ஆரோக்கியதாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதன் வழக்கு விசாரணை கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆரோக்கியதாஸ் குற்றச் செயலில் ஈடுபட்டதை உறுதி செய்தனர். இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தால் நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் ஆரோக்கியதாஸுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறி தீர்ப்பளித்தனர். பாலியல் சீண்டல் வழக்கில் ஆறு ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.