முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இனி பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம்..!! நிபா வைரஸ் பலி எதிரொலி..!

District Collector V. R. Vinod has imposed restrictions for Pandikkad and Anakkayam panchayats. Schools, colleges, madrasas, angawadis and tuition centres in those panchayats will be closed.
03:23 PM Jul 21, 2024 IST | Mari Thangam
Advertisement

Nipah virus: கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. வைரஸ் பாதித்த 14வயது சிறுவன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இந்நிலையில் சிறுவனின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து கோழிக்கோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனின் உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்டு கோழிக்கோட்டிலுள்ள நுண்ணுயிரி பரிசோதனைக் கூடத்தில் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்த சிறுவனுக்கு நிபா வைரஸ் பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். நோய் பாதித்த சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மலப்புரத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. நோய் பாதித்த சிறுவன் வீட்டின் 3 கிமீ சுற்றளவில் உள்ள பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து யாரும் வெளியேறவோ, அந்தப் பகுதிக்கு செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

வென்டிலேடர் உதவியுடன் தனியார் மருத்துவமனையில் மாணவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கோழிகோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சுகாதார ஆய்வாளர்கள் அவரை மாற்றினர். தொடர்ந்து அங்குள்ள தனி வார்டில் மாணவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் முக கவசம் அணிய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Read more ; உலகின் தலைசிறந்த மற்றும் விசித்திரமான அருங்காட்சியம்!! தனித்துவங்களும் சுவாரஸியங்களும்!

Tags :
KeralaMalappuramNipah virusstudent death
Advertisement
Next Article